Categories: வீடியோ

“யாருக்குமே தெரியாம அத பண்ணாரு, ஆனா சாகும்போது”… ரகுவரன் பற்றி பலரும் அறியாத உண்மைகளை உடைத்த சகோதரர்..!!

Spread the love

தமிழ் சினிமாவில் 80களில் முன்னணி நடிகராக கொடிகட்டி பறந்தவர் தான் நடிகர் ரகுவரன். கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான அக்கா என்ற மலையாளத் திரைப்படத்தில் முதல் முதலாக சினிமாவில் நுழைந்தார். அதனை தொடர்ந்து தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே கதாநாயகனாக அறிமுகமாகிய ரகுவரன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். ஆனால் ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கதாபாத்திரம் தான் இவருக்கு நன்றாக பொருந்தியது.

இதனைத் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். 90s ரசிகர்களுக்கு ரகுவரன் ஒரு மிரட்டலான வில்லனாக மிகவும் பிரபலமானவர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் உள்ளிட்ட பல நடிகர்களுடன் இவர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படி பிசியான நடிகராக இருந்த ரகுவரன் கடந்த 1996 ஆம் ஆண்டு நடிகை ரோகினியை திருமணம் செய்து கொண்டார். ரோகினியும் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக திகழ்ந்தவர் தான்.

1975 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ரோகிணி தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமான ரோகினி அதன்பிறகு தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு ரகுவரனை திருமணம் செய்து கொண்ட நிலையில் இரண்டு வருடத்தில் இவர்களுக்கு ரிஷிவரன் என்ற குழந்தை பிறந்தது.

ஆனால் குழந்தை பிறந்த ஆறு வருடங்களில் ரகுவரன் மற்றும் ரோகினி தம்பதியினர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பிறகு ரகுவரன் தனியாக வசித்து வந்த நிலையில் கடந்த 2008 ஆம் ஆண்டு சர்க்கரை நோய் காரணமாக அவர் உயிரிழந்தார். இந்நிலையில் ரகுவரனின் சகோதரர் தனது அண்ணனின் திருமணம் முதல் திரைப்பட வாழ்க்கை என அவர் இறுதியாக சாகும் வரை என்ன நடந்தது என்பது குறித்து பகிர்ந்த ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

சுக்குநூறாக நொறுங்கிய லாரிகள்… துடித்துடித்து பலியான டிரைவர்கள்… கோர விபத்து…!!

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு லாரி ஓட்டுநர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.…

46 seconds ago

70 ஆண்டுகால மர்மம் முடிவுக்கு வருகிறது..! ஏலியன்கள் இருப்பது உண்மையா..? பொய்யா..? ரகசியங்களை உடைக்கப்போகும் ட்ரம்ப்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வேற்றுகிரகவாசிகள் (Aliens) மற்றும் அடையாளம் தெரியாத பறக்கும் பொருட்கள் (UFO) குறித்த ரகசிய ஆவணங்களை…

4 minutes ago

BREAKING : என்கிட்ட மோதாதே… வம்புக்கு இழுக்காதே… எதிர்கட்சியினரை அலறவிட்ட ஸ்டாலின்..!!

திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றிய தருணத்தைக் காட்டுகிறது. மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்த…

9 minutes ago

“என் அம்மா எனக்கு வேணும்” விபத்தில் உயிர் தப்பிய குழந்தை தாயை தேடி அழுத காட்சி.. ஒரே நாளில் மொத்த குடும்பத்தையும் பறிகொடுத்த கொடூரம்..!!

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டம் ராஜ்கர் பகுதியில் டெல்லி-மும்பை எக்ஸ்பிரஸ்வேயில் நடந்த கோர விபத்து, ஒரு குடும்பத்தையே சிதைத்துள்ளது. இந்த…

15 minutes ago

ஆண்களுக்கு அதிர்ச்சி, பெண்களுக்கு மகிழ்ச்சி…! மெனு-வில் இப்படியொரு ரகசியமா…? இளம்பெண் கொடுத்த ‘Men+U’ விளக்கம் சிரிப்பலைகளில் இணையம்…!

சமூக வலைதளங்களில் ஒரு இளம்பெண் உணவகத்தில் உள்ள 'மெனு' (Menu) கார்டுக்கு ஒரு விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விளக்கத்தைக் கொடுக்கும்…

15 minutes ago