“தினமும் வந்து தப்பா நடந்துக்குவார் ” தூக்கத்தில் வரும் கனவு… 15 வயது மைத்துனி சொன்ன பகீர்… 7 வருடம் சிறையில் அடைக்கப்பட்ட விமானப்படை அதிகாரி… கடைசியில் நடந்த பயங்கர டுவிஸ்ட்..!!

Spread the love

கான்பூரில் நடந்த வினோதமான மற்றும் அதிர்ச்சியளிக்கும் போக்சோ (POCSO) வழக்கு ஒன்று, தற்போது சட்ட ரீதியான விவாதங்களை உருவாக்கியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, விமானப்படை அதிகாரியான அனுராக் என்பவர் தனது 15 வயது மைத்துனியைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருமணமான சில நாட்களிலேயே தன் மீது சுமத்தப்பட்ட இந்தப் பழியால் அவர் 19 நாட்கள் சிறைவாசம் அனுபவித்ததோடு, கடந்த ஏழு ஆண்டுகளாகத் தனது நிம்மதியை இழந்து நீதிமன்றப் போராட்டத்தை எதிர்கொண்டார்.

இந்த வழக்கின் விசாரணையில், பாதிக்கப்பட்ட சிறுமி நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் மொத்தக் கதையையும் மாற்றியது. தான் அதிக வீரியம் கொண்ட மருந்துகளை உட்கொண்டிருந்ததால் அரைத் தூக்கத்தில் இருந்ததாகவும், அப்போது தனது கனவில் மைத்துனர் தன்னைத் தீண்டுவது போல் உணர்ந்ததாகவும் அவர் கூறினார். “உண்மையில் எதுவும் நடக்கவில்லை, அது ஒரு மாயை; கனவில் நடந்ததை நிஜம் என்று நினைத்துக் கத்தினேன்” என்று அவர் ஒப்புக்கொண்டார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்ட அனுராக் நிரபராதி எனத் தீர்ப்பளித்து நீதிமன்றம் அவரை விடுவித்தது.

நீதிமன்றம் இந்த வழக்கை வெறும் விடுதலையோடு முடிக்காமல், பொய்யான வழக்கைத் தொடுத்த சிறுமியின் தந்தை விஜய் திவாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. ஆதாரமற்ற புகாரை அளித்து ஒருவரின் வாழ்க்கையைச் சிதைக்க முயன்றதற்காக அவர் மீது எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யவும், நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். கனவை நிஜம் என்று நம்பி ஒரு அதிகாரி சிறை சென்ற இந்தச் சம்பவம், போலி வழக்குகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தோல் உரித்துக் காட்டியுள்ளது

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

5 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

5 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

5 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

5 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

5 மணத்தியாலங்கள் ago