கல்யாணமே ஆகாத உனக்கு எதுக்கு சொத்து… பேராசையில் சொந்த தம்பியையே வெட்டிக் கொன்ற அண்ணன்… பகீர் கிளப்பும் பின்னணி…!

Spread the love

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த காட்பாடி தாலுகா  பொன்னை அடுத்து S.N.பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடரமணன் (48). இவர் அப்பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தக்க தொட்டியில் ஒப்பந்த பராமரிப்பு  வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லையாம். இவருக்கு சொந்தமாக 5 ஏக்கர் நிலம் உள்ளதாம்.  கடந்த 4ஆம்  தேதி அதிகாலை வெங்கடரமணனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்து ஓடினர். அக்கம்பக்கத்தினர் இதைக் கண்டு வெங்கடரமணனை அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தகவலை அறிந்த போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.  மூன்று தனிப்படை கொண்ட போலீசார் விசாரணையில் தெரியவந்தது. வெங்கடரமணனின் பெரியப்பா மகனான சின்னப்பாரெட்டி [52 ] திருப்பதியை சேர்ந்தவர், சாந்தகுமார்[ 48] பொன்னை அடுத்து பி.என்.பாலத்தை சேர்ந்தவர். இவர்களே வெங்கடரமனை தீத்தி கட்டியவர்கள். இருவரையும் போலீசார் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. வெங்கடரமணனுக்கும் , சின்னப்பா ரெட்டிக்கும்  இடையே பல நாட்களாக பிரச்சனை இருந்துள்ளது. காரணம் S.N.பாளையத்தில் உள்ள 15 சென்ட் நிலம் தான். வெங்கட்ரமணனுக்கு அதே கிராமத்தில் 5ஏக்க நிலமும் வீடும் உள்ளது, இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரை கொலை செய்துவிட்டால் S.N. பாளையத்தில் உள்ள சொத்தும் நமக்கே வந்து விடும் என்ற பேராசையில் கொலை செய்ததாக விசாரணை கூறியுள்ளனர்.

இதற்காக கூலிப்படை தலைவரான சாந்தகுமாரை ஏவி விட்டு முன்பணமாக 4 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார். அதன்படி சாந்தகுமார் ஆந்திராவில் இருந்து கூலிப்படையை  கூட்டி வந்து கடந்த மாதமே வெங்கடரமணை  கொலை செய்ய முயன்றுள்ளனர். அப்போது பொதுமக்கள் கூலிப்படையில் ஒருவனை மடக்கிப் பிடித்து விட்டதால் சாந்தத்குமார் சூசகமாக வேலை செய்து கூலிப்படை நபர்களை தப்பிக்க வைத்துள்ளார்.

பிறகு தான் கடந்த 4ஆம் தேதி இரண்டாவதாக திட்டம் போட்டு அவர் நிலத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பித்துள்ளனர். போலீசார் சாந்தகுமாரையும் சின்னப்பா  ரெட்டியையும் அழைத்துச் சென்று ஆந்திர மாநிலம் குண்டக்கல் பகுதியில் கூலிப்படையை சேர்ந்த புஷ்பா[43] மற்றும் ராமையா எனும் ராமகிருஷ்ணன் [44] ஆகியோரை கைது செய்துள்ளனர். அவர்கள் போலீசை தாக்க முயற்சி செய்துள்ளனர்.  போலீசார் இருவரையும் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர் , போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்..

Divyamayakannan

Recent Posts

கார்ப்பரேட் உலகை உலுக்கிய “வேட்டை”… டிசிஎஸ் பெண் ஊழியர்களுக்கு நேர்ந்த கொடூரம்… நாசிக் பிபிஓ-வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!

நாசிக் டிசிஎஸ் (TCS) நிறுவனத்தின் பிபிஓ பிரிவில் பெண் ஊழியர்களுக்கு எதிராக அரங்கேறியுள்ள பாலியல் மற்றும் மத ரீதியான அத்துமீறல்கள்,…

2 minutes ago

போடு ரகிட ரகிட… ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… தமிழக அரசின் அடுத்த அதிரடி…!

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அறிவித்துள்ள மகளிர் நலத்திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில்…

10 minutes ago

“இனி அந்த சலுகை கிடையாது!”… இந்தியாவிற்கு அமெரிக்கா போட்ட ‘செக்’… ட்ரம்ப் 2.0 ஆட்டம் ஆரம்பம்… ஷாக் நியூஸ்…!

சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதாரக் களத்தில் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ள அதிரடி நடவடிக்கைகள், உலக கச்சா…

18 minutes ago

FLASH NEWS: மீண்டும் ரூ.1.15 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை… ஒரே நாளில் புதிய உச்சம்… காலையிலேயே ஷாக்…!

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி (ஏப்ரல் 16), தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்து இல்லத்தரசிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச…

30 minutes ago

தங்கம் ஒரு சவரன் ரூ.2 லட்சமா?.. சர்வதேச சந்தையில் நடக்கும் ‘கோல்டு பிளான்’.. கோல்ட் குரு வெளியிட்ட பகீர் தகவல்…!

தங்கம் இன்று சாமானியர்களின் கைக்கு எட்டாத ஒரு கனியாக மாறிக்கொண்டிருப்பதன் பின்னணியில் உள்ள உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார காரணிகளை…

33 minutes ago

“தங்கம் விலையில் திடீர் திருப்பம்”… சந்தையில் ஏற்படப்போகும் மிகப்பெரிய மாற்றம்… நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!

உலகளாவிய சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தற்போது அதிரடி உயர்வைச் சந்தித்து வருகிறது. இதற்கு முதன்மையான காரணமாக ஈரான்…

41 minutes ago