2026 ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் நார்வே அணியிடம் 2-1 என்ற கணக்கில் பிரேசில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து, பிரேசில் அணியின் நட்சத்திர வீரரும், முன்னணி கோல் அடித்தவருமான நெய்மர் ஜூனியர் சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். மெட்லைஃப் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நார்வேயின் எர்லிங் ஹாலாண்ட் கடைசி நேரத்தில் அடித்த இரட்டை கோல்களால் பிரேசில் தொடரிலிருந்து வெளியேறியது.
போட்டியின் கூடுதல் நேரத்தில் நெய்மர் பெனால்டி மூலம் ஒரு கோல் அடித்தார், ஆனால் அது பிரேசிலின் தோல்வியைத் தவிர்க்க உதவவில்லை. போட்டி முடிந்தவுடன், நெய்மர் மைதானத்திலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதார். சக வீரர்கள் அவரைத் தேற்ற முயன்றனர். தனது 16 ஆண்டுகால சர்வதேச கால்பந்து பயணத்தை முடிவுக்குக் கொண்டுவந்த நெய்மர், “நான் முயற்சி செய்தேன், முயற்சி செய்தேன். இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் எங்கு தொடங்கினேனோ , அங்கேயே முடித்துவிட்டேன்” என்று கண்ணீருடன் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
34 வயதான நெய்மர், பிரேசில் அணிக்காக 130 போட்டிகளில் விளையாடி 80 கோல்களுடன் அந்த நாட்டின் வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராகத் திகழ்கிறார். தனது சர்வதேச வாழ்க்கையில் 2013 கான்ஃபெடரேஷன்ஸ் கோப்பை மற்றும் 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் ஆகியவற்றை பிரேசிலுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், அவர் தனது தற்போதைய கிளப்பான சாண்டோஸ் எஃப்சி அணிக்காகத் தொடர்ந்து விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…