மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஒருதலைக் காதல் மற்றும் ஆத்திரத்தின் காரணமாக சிறுமி ஒருவரைச் சிறுவன் சுட்டுக் கொல்ல முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனும் முன்னதாகப் பழகி வந்துள்ளனர். ஆனால், இடையில் அந்தச் சிறுமி அச்சிறுவனுடன் பேசுவதை நிறுத்திவிட்டு, வேறு ஒருவருடன் பேசத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அச்சிறுவன், “நீ எனக்குக் கிடைக்காவிட்டால் யாருக்கும் கிடைக்கக் கூடாது” என்ற வெறியுடன் இந்தத் துணிகரச் செயலில் ஈடுபட்டுள்ளான்.
கடந்த ஜூன் 6ஆம் தேதி அதிகாலை சுமார் 4 மணியளவில், அந்தச் சிறுமி தனது வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் அங்கு ரகசியமாக நுழைந்துள்ளான். தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் தூங்கிக் கொண்டிருந்த சிறுமியின் தலையில் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இதில் படுகாயமடைந்த அச்சிறுமி உடனடியாகத் தாமோ மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது உயிருக்குப் போராடி வருகிறார்.
இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, பன்னா மாவட்டக் காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுத் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சம்பவ நடந்த 24 மணி நேரத்திற்குள், தாமோ மாவட்டத்தின் உதய்பூர் கிராமத்தில் மறைந்திருந்த அந்த மைனர் சிறுவனைப் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்தனர். பெற்றோரின் முன்னிலையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்தச் சிறுவனிடமிருந்து, குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…