கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிக்கநாயகனஹள்ளி தாலுகாவில் உள்ள பிலிகிஹள்ளி கிராமத்தில், அரசு மூத்த தொடக்கப் பள்ளியில் பயின்று வந்த தனுஷ் என்ற சிறுவன் பள்ளிக்கு அருகில் உள்ள ‘நந்தினி பால் பண்ணை’ கட்டிடத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பார்க்காத விதமாக அந்த கட்டிடத்தின் தூண் இடிந்து சிறுவனின் தலையில் பலமாக விழுந்தது.
இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் தனுஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இச்சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நந்தினி பால் பண்ணையின் தரமற்ற கட்டுமானப் பணிகளே இந்த இடிபாட்டிற்கு முக்கியக் காரணம் எனக் குற்றம் சாட்டும் மக்கள், இதற்குப் பொறுப்பான பொறியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர். இச்சம்பவம் குறித்து ஹந்தனக்கெரே காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித்துறையில் நடந்தாகக் கூறப்படும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்…