விருதாச்சலத்தை சேர்ந்த முருகவேல் (33 )ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் மூத்த மகன் முகேஷ் (7) அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 2ஆம் வகுப்பு படிக்கிறார். இளைய மகன் ரோகித் விருதாச்சலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் முருகவேல் ரோகித்தை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
அதேபோல் நேற்று கும்பபந்தம் கிராம சாலையில் சென்ற போது திடீரென நாய் ஒன்று குறுக்கே சென்றது. நாய் மீது மோதாமல் இருக்க தனது ஆட்டோவை திருப்ப முயன்ற சமயத்தில், அவருடைய ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மண் மேட்டின் மீது ஏறி கவிழ்ந்து விட்டது. இச்சம்பவத்தில் ரோகித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில காயங்களுடன் தப்பிய முருகவேல் அவ்வழியாகச் சென்றவர்களின் உதவியுடன், ரோகித்தை மீட்டு, சிகிச்சைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை சோதித்த மருத்துவர்கள் ரோகித் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர் .இதனைக் கேட்ட முருகவேல், மனம் உடைந்து கதறி அழுதார். இத்துயரச் சம்பவம், அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகிப் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று…
தமிழக அரசியல் வரலாற்றில் 2026 மே 9-ஆம் தேதி ஒரு முக்கிய மைல்கல்லாக பதிவாகியுள்ளது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில்…
தமிழகத்தின் முதலமைச்சராக சி. ஜோசப் விஜய் (விஜய்) இன்று (மே 10, 2026) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றார்.…
சிஎஸ்கே அணியின் பிளே-ஆஃப் கனவுகளைத் தனது அதிரடி பேட்டிங்கால் உயிர்ப்புடன் வைத்திருக்கும் சஞ்சு சாம்சன், அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், 'CMO Tamil Nadu' என்ற அதிகாரப்பூர்வ எக்ஸ்…
தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக…