Categories: சினிமா

இந்தா வந்துட்டாருல்ல.. விஜய் ஆண்டனியை க்ளோஸ் பண்ணிய ப்ளூ சட்டை மாறன்.. மழை பிடிக்காத மனிதன் Review..!!

Spread the love

விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் நேற்று ரிலீசானது. இந்த படத்தில் மேகா ஆகாஷ், சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பெரும்பாலும் விஜய் ஆண்டனி நடிக்கும் படங்கள் குறித்து ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவ் விமர்சனங்களை தான் கொடுப்பார். ஏற்கனவே ரோமியோ படத்தை பற்றி புளூ சட்டை மாறன் விமர்சனம் செய்தார். அதற்கு விஜய் ஆண்டனி பதிலடி கொடுத்தார். அந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் மழை பிடிக்காத மனிதன் குறித்து ப்ளூ சட்டை மாறன் கூறியதாவது, படத்தில் ஒரு மந்திரியோட பையன் போதை பொருள் கடத்துறான்னு சொல்லி ஹீரோ அவரை கொன்னுடுறாரு.

அதற்கு பழிவாங்குறதுக்காக மந்திரி ஹீரோவை கொலை பண்ண முயற்சி பண்றான். அந்த தாக்குதல் ஹீரோவோட மனைவி இறந்துடுறாங்க. விஜய் ஆண்டனி படுகாயம் அடைந்து விட்டார். இந்த வழக்கை முடிப்பதற்காக சரத்குமார் விஜய் ஆண்டனி இறந்து விட்டார் என கூறுகிறார். மேலும் அவர் விஜய் ஆண்டனியை காப்பாற்றுவதற்காக அவரை அந்தமான் தீவிற்கு அழைத்து செல்கிறார். அங்கு ஒரு கந்துவட்டி கும்பலை சேர்ந்தவர்கள் மக்களை கொடுமை படுத்துகின்றனர்.

அப்போது ஹீரோ வெளியே வந்து அதனை தட்டி கேட்டு என்ன நடக்கப்போகிறது என்பதுதான் மீதி கதை. கதை என்னன்னு சரியா தெரியல. கதையை சரியாக கூட திரையில் சொல்லாமல் சொதப்பலா எடுத்து வச்சிருக்காங்க. படத்துல ஹீரோ கேரக்டரை எதுக்காக காப்பாத்தி வச்சாங்கன்னு தெரியல. எந்த ஒரு கேரக்டரும் சரியா எடுக்கல. படம் முழுக்க ஆர்டிபிசியலா தான் இருக்கு. அந்தமானில் இருக்கிற மால் மாதிரி காமிச்சி இருக்காங்க. ஆனா அது இங்கே இருக்க மால்தான்னு படம் பாக்குறவங்களுக்கு தெரியாதா. ரொம்ப சீட் பண்ணி படம் எடுத்து இருக்காங்க.

படத்துக்கு எதுக்கு மழை பிடிக்காத மனிதன் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியல. நம்ம எப்படி படத்தை பார்த்துட்டு படம் பிடிக்காத மனிதர்களாக ஆகிவிட்டோமோ அதே மாதிரி தான் அந்த பேரையும் வச்சிருப்பாங்கன்னு நினைக்கிறேன். விஜய் ஆண்டனி எனக்கு எல்லா வேலையும் தெரியும்னு அவர்தான் எல்லாத்தையும் பண்ணி படத்தைக் கெடுத்து வெச்சி இருக்காரு. இந்த விமர்சனத்தை பார்த்துட்டு விமர்சனம் பிடிக்காத மனிதனா விஜய் ஆண்டனி மாறிவிடுவார். அப்புறம் அன்பே சிவம், குணா போல இந்த படத்தை ஆக்கி விடாதீர்கள் என்று கமெண்ட் அடிச்சு அந்த நல்ல படங்களின் பெயர்களையும் கெடுத்து விடுவார் என கடைசியாக ப்ளூ சட்டை மாறன் வாய்ஸ் ஓவரில் பேசியுள்ளார்.

admin

Recent Posts

டேய் எழும்புங்கடா… சிறுத்தை வருது… தூங்கிய தொழிலாளர்களைத் தாக்க வந்த சிறுத்தை… நொடியில் காப்பாற்றிய கார் ஹார்ன் சத்தம்… மகாராஷ்டிராவில் நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மகாராஷ்டிராவில் திறந்தவெளியில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்களை நோக்கிச் சிறுத்தை ஒன்று மெல்லப் பாய்ந்து வர முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை…

31 seconds ago

எங்க மோட்டாரை தூக்கறியாடா?… நள்ளிரவில் ஸ்கெட்ச் போட்ட ஆட்டோ டிரைவர்… CCTV -யை பார்த்து ஓட ஓட விரட்டி அடித்த சம்பவம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தெருவின் சந்துக்குள் தனது ஆட்டோவை திடீரென நிறுத்திவிட்டு, அங்குள்ள ஒரு வீட்டின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த குடிநீர்…

7 minutes ago

ஐயோ கடவுளே… கார விட்டு வெளியே வர முடியலை?… நடுவழியில் தீப்பற்றி எறிந்த கார்… 4 இளைஞர்கள் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

மத்தியப் பிரதேச மாநிலம் தார் மாவட்டம், சாங்கெஷ்ரா கிராமத்திற்கு அருகே அக்டோபர் 25 அன்று இரவு காரொன்று பள்ளத்தில் விழுந்து…

15 minutes ago

அடபாவேமே..! என்ன நடக்கிறது?… பட்டப்பகலில் சாலையில் சுருண்டு விழுந்த வாலிபர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்… அதிர்ச்சிப் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில், கடுமையான போதைப்பொருள் பயன்பாட்டிற்கு ஆளான நபர் ஒருவர் தன் நிலை மறந்து சாலையில் நிலைதடுமாறித்…

2 மணத்தியாலங்கள் ago

ஏற்கனவே திருமணம் ஆகிட்டா?.. ஹோட்டல் ரூமில் பிணமான புதுப்பெண்… 3 மாசத்துல முற்றுப்பெற்ற வாழ்க்கை… வங்கி மேலாளர் செய்த வெறிச்செயல்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியிலுள்ள ஒரு தங்கும் விடுதி அறையில், திருமணமான மூன்றே மாதங்களில் முஸ்கான் சிமோலியா என்ற…

2 மணத்தியாலங்கள் ago