மனசே பதறுது..! இதுதான் உலகமே போற்றும் மருத்துவ கட்டமைப்பா..? ஸ்டாலின் அரசை சாடிய நயினார்..!!

By Divyamayakannan on செப்டம்பர் 10, 2025

Spread the love

கோவை அரசு மருத்துவமனை, இரண்டு மணி நேரம் காத்திருந்தும் நோயுற்ற தந்தைக்கு சக்கர நாற்காலி வழங்காததால். தந்தையை அவரது மகன் இழுத்துச் சென்ற காணொளியை பார்க்கும்போதே கண் கலங்குகிறது. மலை கிராமங்களில் இன்று வரை நோயாளிகளை  தூளிகட்டி தான் மருத்துவமனைக்கு தூக்கி வருகிறார்கள். நோயுற்றவர்களை அலைக்கலைப்பது தான் இந்த உலகத்தின் மருத்துவ கட்டமைப்பு. ஆட்சி முடிய போகிறது இப்போதாவது மக்களுக்கு ஏதேனும் நன்மையை செய்யுங்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சும்மாவே இருக்கீங்களே மனசாட்சி இல்லையா. தமிழக மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இச்சம்பவத்தைக் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.