“மோடி விசிட் முடிஞ்ச 3 நாள்ல வந்த ஷாக்”…. எல்.முருகனின் ராஜினாமா பின்னணியில் இருக்கும் ரகசியம்…. டெல்லி மேலிடம் எடுத்த அதிரடி முடிவு…!

Spread the love

மத்திய அமைச்சரவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதியாக இருந்து வந்த எல்.முருகன் தனது அமைச்சர் பதவியையும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2029 நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்சியை வலுப்படுத்தும் பணியில் ஈடுபடப்போவதாக அவர் விளக்கம் அளித்துள்ள போதிலும், இதற்குப் பின்னால் பல அதிருப்தி காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய இணையமைச்சராகப் பதவியில் இருந்த எல்.முருகனின் செயல்பாடுகள் பிரதமர் அலுவலகத்தின் ஆய்வில் திருப்திகரமாக இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டிற்கு அவரது துறை வாயிலாகக் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் மிகவும் குறைவாகவே இருந்ததும், மாநிலத் தேர்தல் களத்தில் உரிய தொகுதிகளைப் பெறத் தவறியதும் டெல்லி மேலிடத்திற்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இவற்றுடன், டெல்லியில் அவரது உதவியாளராகப் பணியாற்றியவர் தொடர்பான சில சர்ச்சைகளும், பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது நிகழ்ந்த பாதுகாப்பு நெறிமுறை மீறல்களும் விவகாரத்தை மேலும் தீவிரமாக்கியுள்ளன. உடனடியாகப் பதவியை ராஜினாமா செய்யும்படி டெல்லி தலைமை வலியுறுத்தியதைத் தொடர்ந்தே இந்த அதிரடி நீக்கம் அரங்கேறியுள்ளதாகக் கமலாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சியை வலுப்படுத்தப் போவதாக எல்.முருகன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள போதிலும், தற்போதைய சூழலில் அவருக்கு மீண்டும் அரசியலில் கம்பேக் கொடுப்பது எளிதான காரியமாக இருக்காது என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இந்தத் திடீர் திருப்பம் தமிழக பாஜக அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

7 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

15 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

21 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

36 minutes ago

விபத்தா?… இல்ல கொலையா?… இதயத்தில் ஆணி பாய்ந்து ஊழியர்… துடிதுடித்து இறந்த பகீர் சம்பவம்… நெஞ்சை நடுங்கவைக்கும் சோகம்…!!

நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள மதுபானக் கடையில் பணியாற்றி வந்த 39 வயது ஊழியர் ஒருவர், நெஞ்சில் ஆணி பாய்ந்து…

44 minutes ago

இத்தனை வருஷ வேர்வை வீண் போகல… காவல் அதிகாரியின் நெகிழ்ச்சியான பதவி உயர்வு தருணம்… ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிய குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

அமிர்தசரஸில் இருந்து வெளியான நெகிழ்ச்சியான சிசிடிவி காட்சி ஒன்று இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது. உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சரண்ஜித்…

56 minutes ago