2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டு, எடப்பாடி பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது பாஜகவின் ஒரு அதிரடி முடிவு அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில முக்கிய தொகுதிகளில் அதிமுகவின் பலத்தை மீறி, பாஜக தன்னிச்சையாக வேட்பாளர்களை அறிவித்துள்ளதாகக் கூறப்படும் தகவல், இரு கட்சிகளுக்கும் இடையே தொகுதிப் பங்கீடு மற்றும் செல்வாக்கு குறித்த மோதலை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
குறிப்பாக, அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் சில தொகுதிகளில் பாஜக தனது வேட்பாளர்களை களமிறக்கத் துடிப்பது, கூட்டணி தர்மத்தை மீறுவதாக அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர். அமித் ஷா அவர்களின் வருகைக்குப் பிறகு கூட்டணியில் உற்சாகம் நிலவிய நிலையில், இந்த வேட்பாளர் அறிவிப்பு விவகாரம் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்குப் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் போளூர் தொகுதி பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட சம்பவம் அதிமுகவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திருவண்ணாமலை, தேவிகாபுரத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பேசிய பாஜக மாநில துணை தலைவர் டால்பின் ஸ்ரீதரன், இத்தொகுதியில் பாஜகவின் ஏழுமலை போட்டியிடுவார் என அறிவித்தார். இவ்விவகாரம், அங்கு சிட்டிங் MLA-வும், தற்போது சீட்டுக்காகவும் காத்திருக்கும் EX அமைச்சர் SS அக்ரி கிருஷ்ணமூர்த்தியை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்காக அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…
திமுக ஐடி விங்கின் மாநில துணைச் செயலாளரும், பிரபல ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், தேர்தல் பிரச்சாரத்தின் போது தமிழக…
புதுச்சேரியில் விடுதி மேலாளர் ஒருவரிடம் நூதன முறையில் லட்சக்கணக்கில் பணம் தருவதாக ஆசை காட்டி மோசடி செய்த கும்பல் குறித்துப்…