Categories: சினிமா

இதுவரை வெளிவந்து செல்லுபடியாகாத 5 பயோபிக்.. அப்போ இளையராஜாவோட நிலைமை கேள்விக்குறி தானா..?

Spread the love

தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்களுக்கும், ஆக்சன் திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது .ஆனால் ஒரு சில பெரியோர்களின் வாழ்க்கை வரலாற்று படங்களும் அவ்வப்போது திரையில் ரிலீசாகின்றன. ஆனால் அந்த படங்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைப்பதில்லை. அப்படி திரையரங்குகளில் வெளியாகி தோல்வி அடைந்த 5 வரலாற்று படங்களை பற்றி இந்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.

ராக்கெட்ரி- நம்பி விளைவு:

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகிய திரைப்படம் ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’. இந்தப் படத்தை நடிகர் மாதவனே நடித்து இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் நடிகர் மாதவன் இயக்குநராக அறிமுகமாகிறார். இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன், ராக்கெட் தொழில்நுட்பத்தை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கில் நம்பி நாராயணன் நிரபராதி என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் பின்னணியில் உள்ள உண்மையை வெளிப்படுத்தும் கதையாக இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இந்தி, தமிழ், ஆங்கிலம், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் ரிலீசானது. நடிகர் மாதவன், நம்பி நாராயணனாக நடிக்க சிம்ரன், பிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா, ரான் டொனைச்சே , ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் உட்பட பலர் இத்திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

ராமானுஜம்:

இயக்குனர் ஞானராஜசேகரன் இயக்கத்தில் கணிதமேதை ராமானுஜன் அவர்களின் வாழ்க்கையை பயோபிக் படமாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் கணிதமேதை ராமானுஜன் கதாபத்திரத்தில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரனான பிக் பாஸ் புகழ் அபினய் நடித்திருந்தார். தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் வெளியான இத்திரைப்படம் தமிழ் மாநில விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.

காமராஜ்:

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவராக கருதப்படுபவர், பெருந்தலைவர் காமராஜர். தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்த இவருடைய காலம், தமிழக அரசியல் வரலாற்றில் “பொற்காலமாக” கருதப்படுகிறது. பள்ளிக்குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார். இவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுத்த போது, அதில் காமராஜராக எம் எஸ் பாஸ்கர் நடித்திருந்தார்.

தலைவி:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கிய இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கணா ரணாவத் நடித்திருந்தார். இவருடன் அரவிந்த்சாமி, மதுபாலா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தை அவரது தொண்டர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

பெரியார்:

பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்த் திரைப்படம் ‘பெரியார் ‘இப்படத்தில் பெரியாராக சத்யராஜ் நடித்தார். ஞான ராஜசேகரன் இப்படத்தை இயக்கியுள்ளார். வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.  இப்படத்தை லிபர்டி கிரியேஷன்ஸ் சார்பில் கோ.சாமிதுரை தயாரித்தார்.இப்படத்தில் மணியம்மையாக நடிகை குஷ்பூ மற்றும் நாகமாலாவாக ஜ்யோதிர்மயி நடித்திருந்தனர் . பல சர்ச்சைகளுக்கு பின் வெளியான பெரியார் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இந்நிலையில் இளையராஜாவின் (பயோபிக்) வாழ்க்கை வரலாற்றை எடுக்க இருப்பதாகவும், அதனை இளையராஜாவே  தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது இத்திரைப்படத்தை கேப்டன் மில்லர் திரைப்படத்தின் இயக்குனர் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதேபோன்று ராமதாஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இதுவரை எடுத்த பயோபிக்கள் பலவும் சரியாக ஓடாததால், இனி இளையராஜாவின் கதி என்னவோ…? என்ன நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

வெயிலின் உக்கிரம்.. “ஏசி-யே இல்லாத ஊருக்கு என்னாச்சு?.. வீட்டிற்குள்ளேயே உருகும் கிரேயான்கள்”… மிரண்டு போன மக்கள்… பெங்களூரு பெண் பகிர்ந்த ஷாக் வீடியோ..!!!

இதமான வானிலைக்குப் பெயர் பெற்ற பெங்களூரு நகரம், தற்போது சந்தித்து வரும் கடுமையான வெப்ப உயர்வு குறித்த விவாதங்களை ஒரு…

4 minutes ago

“வீட்டிலேயே ஒரு மினி குற்றாலம்!… இதைவிட ஒரு அழகான குளியலை நீங்கள் பார்த்திருக்க முடியாது!”… நெட்டிசன்களை நெகிழ வைத்த சிறுவன்… வைரலாகும் க்யூட் வீடியோ…!!

மகிழ்ச்சி என்பது விலை உயர்ந்த பொருட்களில் இல்லை, அது நம்மைச் சுற்றியுள்ள எளிய விஷயங்களிலும், நமது பார்வையிலும் தான் இருக்கிறது…

14 minutes ago

சாமியை கும்பிடறதா…? இயற்கையை அழிக்கிறதா….? நதிகளை மாசுபடுத்துபவர்களுக்கு முன்னாள் நீதிபதி வைத்த ‘செக்’…!!

மதச் சடங்கு என்ற பெயரில் நீர்நிலைகளை மாசுபடுத்துவது மற்றும் உணவுப் பொருட்களை வீணாக்குவது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி…

28 minutes ago

“ஒரே நாளில் 12,000 கோடி”… 8000 ரூபாய் கூப்பனில் ஒளிந்திருக்கும் அந்த கேம் சேஞ்சர்… சீக்ரெட்டை அவிழ்த்துவிட்ட ப. சிதம்பரம்…!

தமிழக அரசின் ரூ. 8,000 மதிப்பிலான இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் தற்போது அரசியல் மற்றும் பொருளாதாரத் தளங்களில் பெரும் விவாதப்…

29 minutes ago

படுக்கையறையில் காத்திருந்த எமன்.. தலையணைக்கு அடியில் இருந்த பாம்பு… 8 வயது சிறுவன் துடிதுடிக்க உயிரிழப்பு..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடாலி பகுதியில், தூக்கத்தில் பாம்பு கடித்ததில் 8 வயது சிறுவன் அல்ஜோ பரிதாபமாக உயிரிழந்த…

31 minutes ago

ராகுல் ஒன்னு சொல்ல…. செல்வா ஒன்னு சொல்ல…. ராணிப்பேட்டையில் நடந்த செம சொதப்பல்…. சிரிப்பாய் சிரிக்கும் காங்கிரஸ் மேடை…!!

ராணிப்பேட்டையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசிய உரையைத் தமிழக காங்கிரஸ் தலைவர்…

36 minutes ago