பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்பொழுது தொடங்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில் 8வது சீசன் ஆரம்பமாகிவிட்டது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த முறை ஆண்கள் மற்றும் பெண்கள் என வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டிற்கு நடுவில் கோடு போடப்பட்டுள்ளது. எனவே தற்போது ஆண்கள் ஒரு பக்கம் மற்றும் பெண்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். தற்போது தான் போட்டி சூடுபிடித்துள்ளது. ஒருவரையொருவர் தாக்கி பேசியும், சண்டையிட்டும் வருகிறார்கள்.
இதனால் வார கடைசியில் VJS போட்டியாளர்களை தொடர்ந்து வறுத்தெடுத்து வருகிறார். பிக்பாஸில் இருந்து அர்னவ், ரவீந்தர், தர்ஷா குப்தா ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டார்கள். போன வாரம் நாமினேஷன் லிஸ்டில் அன்ஷிதா, அருண் பிரசாத், தர்ஷா, ஜாக்குலின், முத்து, பவித்ரா ஜனனி, சத்யா மற்றும் சவுந்தர்யா ஆகியோர் இருந் நிலையில் தர்ஷா குப்தா வெளியேறினார். இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை சூடு பிடிக்க தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்களிடம் எதிர்பார்க்காத ரெஸ்பான்ஸ் இல்லாத காரணத்தால் இந்த வாரம் 5 புதிய வைல்ட் கார்டு என்ட்ரி போட்டியாளர்களை விஜய் டிவி களமிறக்கியுள்ளது. இது ஒரு புறம் இருக்கையில் தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு 19 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.
போட்டியாளர்கள் அதிகமாக இருப்பதால் வீடு நிரம்பியுள்ளது. இதனால் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கலாம் என்று கூறப்பட்டது. அந்தவகையில் எலிமினேஷனில் இதனை தொடர்ந்து இந்த வாரம், அன்ஷிதா, சாச்சனா, ஜாக்குலின், சுனிதா, அருண், விஷால், ஆனந்தி, ரஞ்சித், முத்துகுமரன், தீபக், பவித்ரா ஆகியோர் இருக்கிறார்கள். இதில், ஆனந்தியும், சுனிதாவும் குறைவான வாக்குகள் பெற்று கடைசியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறவுள்ளார்.
இந்நிலையில் பிக் பாஸ் இன்றைய ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் வழக்கம் போல விஜய் சேதுபதி போட்டியாளர்களிடையே பற்ற வைத்துள்ளார். அதாவது இவங்க எல்லாம் மொட்டை கடுதாசி இருந்தா தான் பேசுவாங்க மத்தபடி நேர்ல ஏதும் பேச மாட்டாங்க என்று நீங்க யார சொல்றீங்க என்று போட்டியாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். உடனே ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒவ்வொருவரையும் விமர்சனம் செய்ய அவர்களுக்கு இடையே சண்டையை உண்டு பண்ணுகிறான் விஜய் சேதுபதி. அது தொடர்பான புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…