Categories: சினிமா

Unsafe-னு சொல்லிட்டு எதுக்கு பிரதீப் கட்டி புடிச்சீங்க, ஐஷு பெற்றோர் இத பாக்க மாட்டாங்களா.. ? விளாசும் விசித்ரா கணவர்…

Spread the love

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆனது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.  இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களைத் தொடர்ந்து 5 வைல்ட் கார்டு போட்டியாளர்களும் தற்பொழுது பிக் பாஸ் வீட்டில் உள்ளனர்.  இவர்களில் கலந்து கொண்ட நாள் முதலே மிகவும் சாதுரியமாகவும், பிக் பாஸ் கேமை நன்றாக புரிந்து கொண்டும் விளையாடியவர் தான் போட்டியாளர் பிரதீப். இவர் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் கவினின் நண்பர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இதற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற கவினை பார்க்க பிக் பாஸ் வீட்டிற்குள் வந்திருந்தார் பிரதீப். அப்பொழுது அவரை ஓங்கி அறைந்தார். இதன் மூலம் அவர் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். தற்பொழுது இவர் பிக் பாஸ் சீசன் 7ல் கலந்து கொண்டு தனது சிறப்பான விளையாட்டினை வெளிப்படுத்தி வந்தார். இவர் தான் டைட்டிலே வெல்வார் என்று இவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில், சக ஹவுஸ்மேட்களால்  டார்கெட் செய்யப்பட்டு, ஒரு பொய்யான குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது.

அதாவது பிக் பாஸ் வீட்டில் இவர் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பெரும்பாலான போட்டியாளர்கள் வாக்களித்து, அவருக்கு ரெட் கார்ட் கொடுத்து, கமலஹாசன் எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் அவரை ரெட் கார்டு கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றினார். இந்த சர்ச்சை தற்பொழுது வரை தீயாய் பற்றி எரிந்து வருகிறது. இணையத்தில் பிரபலங்களும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்களும், ரசிகர்களும் என பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விசித்ரா, அர்ச்சனா, தினேஷ் என ஒரு சில போட்டியாளர்கள் அவருக்கு ஆதரவாக பிக் பாஸ் வீட்டிற்குள் குரல் எழுப்பி வருகின்றனர். அவரது எவிக்ஷன் நியாயமற்றது என வாதாடியும் வருகின்றனர். இந்நிலையில் விசித்தாவின் கணவர் தற்பொழுது இணையத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் ‘பிரதீப்பை unsafe என்று சொல்லும் அக்ஷயா மற்றும் ஐசு இருவருமே இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் பிரதிப்பை கட்டி பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

 unsafe என்று சொல்லப்படும் ஒரு நபரை எதற்காக அவர்கள் கட்டி பிடிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் விசித்திரா பிரதீப்பிற்கு சப்போர்ட் செய்யவில்லை. அந்த குற்றச்சாட்டுக்கு அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிக அதிகம் என்றுதான் கூறியுள்ளார். மேலும் அவருக்கு ஒரு வாய்ப்பு அளித்து இருக்கலாம் என்று தானே கூறுகிறார். என்று தனது மனைவியின் பக்கம் உள்ள நியாயத்தை கூறியுள்ளார். தற்பொழுது அவரின் இந்த பேட்டியானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“மேடம்… நீங்களே இப்படி பண்ணலாமா…?” விஜயதசமி கொண்டாட்டத்தில் ஏகே-47 துப்பாக்கியால் சுட்ட ஐபிஎஸ் அதிகாரி… வைரல் வீடியோவால் சர்ச்சை…!!

சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…

8 மணத்தியாலங்கள் ago

மிரண்டு ஓடி கார்களை கவிழ்த்த யானை…! சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையுடன் கூடிய அமாரி கீழே விழுந்து சேதம்… பயந்து நடுங்கிய மக்கள்… திகில் வீடியோ வைரல்…!!

கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…

8 மணத்தியாலங்கள் ago

பூனையுடன் விளையாடிய 18 மாத குழந்தை… மாடியில் இருந்து தூக்கி வீசிய சிறுவன்… தாயின் விடாமுயற்சியால் அம்பலமான உண்மை… பரபரப்பு சம்பவம்…!!

6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago

“யார்கிட்ட பேசுற…?” திருமணமான 6 மாதத்தில்…. மனைவியை கொன்றுவிட்டு விபத்து போல நாடகமாடிய கணவன்… விசாரணையில் தெரிந்த பகீர் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…

8 மணத்தியாலங்கள் ago

மக்களே உஷார்!… உயிருக்கே ஆபத்தா?… 3 நாள் காய்ச்சல்… பறிபோன 24 வயது இளைஞரின் உயிர்… மருத்துவமனையில் நடந்தது என்ன?…!!

சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…

8 மணத்தியாலங்கள் ago

மனசாட்சியே இல்லையா…? வாலிபரை கட்டை, குழாயால் அடித்து வெளுத்த கும்பல்…. நடுரோட்டில் வெறிச்செயல்…. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

8 மணத்தியாலங்கள் ago