விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று பிக் பாஸ். 6 சீசன்களை கடந்த இந்த நிகழ்ச்சியின் 7 வது சீசன் தற்பொழுது ஒளிபரப்பாகி வருகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியானது இன்றுடன் 37 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்தபிக் பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் அனன்யா, பாவா செல்லத்துரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் என 5 போட்டியாளர்கள் தற்பொழுது வரை வெளியேற்றப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் விறுவிறுப்புக்கும் , சண்டைக்கும் பஞ்சமில்லாமல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சனிக்கிழமை எபிசோடில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூறி பிரதீபுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பினார் கமலஹாசன்.
தற்பொழுது வரை இணையத்தில் பல்வேறு தரப்பினரும் கமலஹாசனுக்கு தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். பிக் பாஸ் வீட்டிற்குள் வைல்ட் கார்டு போட்டியாளர்களாக களமிறங்கியவர்கள் பாடகர் கானா பாலா, சீரியல் நடிகை அர்ச்சனா, சீரியல் நடிகர் தினேஷ், அன்னபாரதி, RJ பிராவோ .
இந்நிலையில் வந்த முதல் வாரமே பிக் பாஸ் வீட்டை விட்டு நேற்று குறைந்த வாக்குகள் பெற்று அன்னபாரதி வெளியேற்றப்பட்டுள்ளார். தற்பொழுது அவரின் சம்பளம் குறித்த விவரங்கள் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. அதன்படி ஒரு நாளைக்கு அன்னபாரதி பிக் பாஸ் வீட்டில் இருப்பதற்கு ரூ. 20,000 பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இன்று பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சபை ஒத்திவைக்கப்பட்ட பிறகும் அமைச்சர் ஒருவர் தொடர்ந்து…
தமிழகச் சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் விஜய் பதிலளித்துப் பேசியபோது, முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின்…
சட்டப்பேரவையில் கடந்த ஆட்சியை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதலமைச்சர் விஜய், கடந்த 9, 10 மாதங்களாக நமது மாநிலத்தில்…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய முதலமைச்சர் விஜய், கடந்த தி.மு.க ஆட்சி குறித்து கடுமையான…
தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் உரையாற்றியபோது, டாஸ்மாக்கில்…