விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில் இந்த முறை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றார். மொத்தம் 24 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 8 போட்டியாளர்களுடன் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதில் மொத்தம் பத்து போட்டிகள் நடத்தப்படும். அதில் வெற்றியடையும் போட்டியாளர் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார். கடந்த வாரம் டிக்கெட் டூ பினாலே நடைபெற்றது. போட்டியாளர்கள் வெறித்தனமாக விளையாடினர். இதில் முதல் போட்டியாளராக ரயான் டிக்கெட் டூ பினாலேவில் நுழைந்துள்ளார். இன்னும் இரண்டு வாரங்களில் இந்த நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக டபுள் எவிக்ஷன் நடைபெற்ற நிலையில் கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் பவித்ரா, மஞ்சரி, தீபக், ஜாக்குலின், முத்துக்குமரன், அருண் பிரசாத், விஷால், ரயான், சௌந்தர்யா மற்றும் ராணவ் ஆகிய 10 போட்டியாளர்கள் இருந்தனர். இவர்களில் ஒருவர் தான் பிக் பாஸ் டைட்டில் வின்னர் பட்டத்தை கைப்பற்ற உள்ளனர். இப்படியான நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த சனிக்கிழமை போட்டியாளர் ராணவ் வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று மஞ்சரி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…