விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் ஷிவின் கணேசன். இவர் மாடலிங் துறையில் சிறந்து விளங்கி வருகிறார். திரைப்படங்களில் திருநங்கை கதாபாத்திரங்களில் ஆண்களை நடிக்க வைப்பதை விட ஆசை உள்ள நிஜ திருநங்கைகளை நடிக்க வைக்கலாம் என்பதுதான் இவரின் கருத்து.
மாடல், நடிகை மற்றும் ஐடி ஊழியரான இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்களுக்கு அவர்களின் அடிப்படை கல்வி அறிவு திறன்களை மேம்படுத்த உதவும் தொழில் வழிகாட்டியாக பணியாற்றி வருகிறார். அதே சமயம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஸ்பெயினில் நடந்த மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இன்டர்நேஷனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்.
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய இவருக்கு ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல ஆதரவு இருந்து வருகிறது. இவர் எப்பொழுதும் சோசியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.
தற்பொழுது ஷிவின் ‘MISS INDIA UNIVERSE COMPETITION’ கலந்து கொள்ள உள்ளார். இதற்காக வேண்டி அவர் மாடலிங் ப்ராக்டிஸ் செய்யும் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். ஆனால் இந்த வீடியோவில் அரைகுறை ஆடையில் இருக்கும் ஷிவினை ரசிகர்கள் பலரும் கமெண்ட் பக்கத்தில் திட்டி வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…
ஈரானின் அணுசக்தி நிலையங்களை முடக்கும் நோக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து "ஆபரேஷன் மிட்நைட் ஹேமர்" என்ற பெயரில்…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்னாவில், ஒருதலைக் காதலால் நிகழ்ந்த கொடூரமான பழிவாங்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னைத் திருமணம் செய்து…
தமிழக அரசியல் வரலாற்றில் கடந்த 15 ஆண்டுகள் என்பது வெறும் ஆட்சி மாற்றங்களை மட்டுமல்ல, வாக்காளர்களின் மனநிலையிலும் பெரும் முதிர்ச்சியை…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே இன்று அதிகாலையில் நிகழ்ந்த கோர விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு - ஓசூர்…
உத்தரப் பிரதேச மாநிலம் பதாயூன் மாவட்டத்தில், குடும்பச் சண்டையின் உச்சக்கட்டமாக ஐந்து மாதப் பச்சிளம் குழந்தையைத் தந்தையே மாடியிலிருந்து வீசிக்…
அமெரிக்க நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்காலத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளைத் திரும்ப வழங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க…