Categories: CINEMA

அடடே நீங்களுமா இருக்கீங்க…? பிரம்மாண்டமாக நாளை தொடங்கவுள்ள பிக் பாஸ் சீசன் 7…! வெளியான இறுதி போட்டியாளர்கள் லிஸ்ட்…!

தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. திரு.கமல்ஹாசன் அவர்கள் தொகுப்பாளராக இருந்து வந்ததே இந்நிகழ்ச்சிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதுவரை 6 சீசன்கள் கடந்திருக்கும் பிக் பாஸ் தற்போது ஏழாவது சீசனை எதிர்நோக்கி செல்கிறது. கடந்த சீசனில் அசிம் ,தனலட்சுமி, ஜனனி, ஷிவின் ,விக்ரமன் ஆகிய போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடியது நாம் அனைவரும் அறிந்ததே .

கடந்த ஆறாவது சீசனில் அசிம் முதலிடத்திலும், விக்ரம் இரண்டாம் இடத்தையும், ஷிவின் மூன்றாம் இடத்தையும் பிடித்தார். தற்பொழுது ஒளிபரப்பாகவிருக்கும் ஏழாவது சீசனில் யார் உள்ளே வரக்கூடும் என்பது பற்றி மக்களிடையே கேள்வி எழுந்துள்ளது. இந்த 7 வது சீசன் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து இதில் கலந்து கொள்ளவுள்ள போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் தான் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

விசித்ரா:

அதன்படி குக் வித் கோமாளி விசித்ரா, வெள்ளித்திரையில் பிரபலமான இவர் தற்பொழுது சின்னத்திரையிலும் கால்பதித்து கலக்கி வருகிறார். இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

வினுஷா:

‘பாரதி கண்ணம்மா’வில் கண்ணம்மாக ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இதைதொடர்ந்து இவர் தற்பொழுது வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

யுகேந்திரன்:

மறைந்த பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவனின் மகன். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பாடல்களைப் பாடியிருக்கும் பின்னணிப் பாடகர். சில படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நடிகராகவும் பல படங்களில் கால் பதித்து கலக்கியவர். இவரும் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார் என கூறப்படுகிறது.

நிக்‌ஷன்:

இவர் ஒரு இளம் பாடலாசிரியர். சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் என கூறப்படுகிறது. இவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

மூன் நிலா:

இவர் ஒரு மலேசியத் தமிழ்ப் பெண். சோஷியல் மீடியாவிலும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார்.

ரவீனா தாஹா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மௌன ராகம் சீரியலின் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா தாஹா. இதைத்தொடர்ந்து இவர்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தற்பொழுது வெள்ளித்திரையில் கால் பதித்து கலக்கி வருகிறார்.

நிவிஷா:

சன் டிவி சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த ஒரு சீரியல் நடிகை தான் நடிகை நிவிஷா. இவரும் தற்பொழுது பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளார். இவர்களுடன் தர்ஷா குப்தா, பாலசரவணன், விஜய் வர்மா, விஜய் கந்தன், ஃப்ரெடரிக் ஜான்சன், வி.ஜே.பார்வதி, ரக்ஷன், டான்ஸ் மாஸ்டர் ஶ்ரீதர் ஆகியோரது பெயர்களும் இருப்பதாகவும், இவர்களில் ஒரு சிலர் பிக் பாஸ் வீட்டுக்குள் செல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Begam

Recent Posts

அரசியலுக்காக சினிமாவை கைவிடுவதாக சொன்ன தளபதி.. அதற்கு நேர் எதிராக அப்பவே எம்ஜிஆர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

நடிகர் விஜய் அரசியலில் களமிறங்க உள்ளதால் சினிமாவை கைவிடுவதாக கூறி இருந்த நிலையில் அதற்கு நேர் எதிராக அந்த காலத்தில்…

4 நிமிடங்கள் ago

குரூப் டான்ஸரில் இருந்த உன்ன ஹீரோயின் ஆக்குனதே நான்தான்.. பேசாம உன் வேலைய மட்டும் பாரு.. ஷூட்டிங் ஸ்பாட்டில் மும்தாஜை திட்டிய பிரபல இயக்குனர்..!!

90'S காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் மும்தாஜ். இவர் டி.ராஜேந்தர் இயக்கிய மோனிஷா என் மோனாலிசா என்ற…

25 நிமிடங்கள் ago

40 வயதை தாண்டிய நிலையிலும்.. பார்ப்பதற்கு பொம்மை போல் இருக்கும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

பிரபல சீரியல் நடிகையான ஸ்ருதி ராஜ் பொம்மை போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரை வர்ணித்து வருகின்றார்கள்.…

33 நிமிடங்கள் ago

உடம்பு முழுவதும் சாயம்.. ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வித்தியாசமாக வந்த விஜய் ஆண்டனி.. என்ன ஒரு டெடிகேஷன் பாருங்க..!

'மழை பிடிக்காத மனிதன்' என்ற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகர் விஜய் ஆண்டனி சாயம் பூசிய முகத்துடன் வந்ததை…

54 நிமிடங்கள் ago

அந்த கேரக்டர்ல நடிக்க மாட்டேன்னு சொன்னேன்.. ஆனா அவர் தான் வற்புறுத்தி நடிக்க வச்சாரு.. ஓபனாக பேசிய கோவை சரளா..!

தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நகைச்சுவை நடிகையாக வளம் வந்த கோவை சரளா சின்ன வீடு திரைப்படத்தில் நடித்தது குறித்து பல…

2 மணி நேரங்கள் ago

‘வேதம் புதிது’ பட நடிகர் ராஜாவா இது..? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாரே.. இப்ப எப்படி இருக்காரு பாருங்க..!

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ராஜாவின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில்…

2 மணி நேரங்கள் ago