பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியின் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ள நிலையில், தற்பொழுது 6-வது சீசன் அக்டோபர் 9 ல் தொடங்கவுள்ளது.
கடந்த 5 சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த 6 வது சீசனையும் உலகநாயகன் கமலஹாசனே தொகுத்து வழங்குவார் என்பது ப்ரோமோ மூலம் நமக்கு தெரிய வந்துள்ளது. தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் போட்டியாளர்களின் முழு பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.மேலும் இது அதிகாபூர்வமான பட்டியல் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி தொகுப்பாளினி டிடி, சூப்பர் சிங்கர் ராஜலக்ஷ்மி, ராஜா ராணி அர்ச்சனா, மைனா நந்தினி, சீரியல் நடிகை ஸ்ரீநிதி, VJ ரக்ஷன், சரவணன் மீனாட்சி ரச்சிதா மஹாலக்ஷ்மி, விஜே அஞ்சனா, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் அண்ணன் மணிகண்டன், ஜி.பி. முத்து உள்ளிட்டோர் பிக் பாஸ் சீசன் 6-ல் கலந்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக முதலமைச்சர் விஜய் ஊழலற்ற மற்றும் நேர்மையான ஆட்சியை நடத்தி வருவதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ…
அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக அரசியல் களம் மற்றும் கட்சியின் எதிர்கால வியூகம்…
கூட்டுறவு மற்றும் பொதுத்துறை வங்கிகளில் பொதுமக்கள் பெற்றுள்ள நகைக்கடன்கள் குறித்த விவரங்களை தமிழ்நாடு அரசு தீவிரமாகச் சேகரித்து வருவதாகத் தகவல்கள்…
தமிழ்நாடு முழுவதும் உள்ள இ-சேவை மற்றும் பொது சேவை மையங்களில் அதிரடி ஆய்வு நடத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.…
அதிமுகவில் நீடிப்பதா அல்லது மாற்றுக்கட்சியில் இணைவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தனது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை…
அதிமுகவில் இருந்து முக்கிய முன்னாள் அமைச்சர்களும், முன்னணி நிர்வாகிகளும் அடுத்தடுத்து விலகி வருவது கட்சிக்குள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால்,…