Categories: சினிமா

தொடரும் பிரபலங்களின் விவாகரத்து.. திருமணமாகி 4 வருடங்களில் உறவை முறித்துக் கொண்ட பிக்பாஸ் ஜோடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Spread the love

பிக்பாஸ் பிரபலங்களான நடிகர் சந்தன் செட்டி மற்றும் அவரின் மனைவி நிவேதிதா இருவரும் பிரிய இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் அறிவித்திருக்கிறார்கள்.

நடிகர்கள் மற்றும் நடிகைகள் அடுத்தடுத்து விவாகரத்து பெற்று பிரியும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. பல பிரபலங்கள் தங்களது விவாகரத்தை அறிவித்து ரசிகர்களிடையே அதிர்ச்சியை கொடுத்து வருகிறார்கள். தமிழ் சினிமாவில் தனுஷ்-ஐஸ்வர்யா விவாகரத்து தொடங்கி ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து வரை பல பிரபலங்கள் பிரிந்து வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்துகின்றது.

அதேபோல கன்னட நட்சத்திர தம்பதிகளும் தற்போது தங்களது விவாகரத்தை அறிவித்திருக்கின்றார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக பிரபலமானவர்கள் தான் சந்தன் செட்டி மற்றும் அவருடைய மனைவி நிவேதிதா இருவரும் 2020 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று தங்களது விவாகரத்தை அறிவித்திருக்கிறார்கள்.

கன்னட சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் நடிகராக வலம் வருபவர் சந்தன் செட்டி இவர் நடிகராக மட்டுமில்லாமல் இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர், பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்ற இவர் டைட்டிலையும் வென்றிருந்தார். இவரும் நடிகை நிவேதிதாவும் மிகப் பிரபலமாக வளம் வந்த நிலையில் இருவரும் விவாகரத்து அறிவித்திருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தற்போது நிவேதிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதில் நானும் சந்தன் செட்டியும் நல்ல புரிதலோடு சட்டரீதியாக எங்களது திருமணத்தை முறித்துக் கொள்ள முடிவெடுத்துள்ளோம். ஊடக நண்பர்கள், ரசிகர்கள் எங்களது தனிப்பட்ட வாழ்க்கையின் முடிவுக்கு மதிப்பளிக்க வேண்டுகிறோம்.

நாங்கள் இருவரும் வெவ்வேறு திசையில் சென்றாலும் ஒருவர் மீது மற்றொருவர் அக்கரையாக எப்போதும் இருப்போம். உங்களின் ஆதரவு எப்போதும் எங்களுக்கு வேண்டும். இந்த கடினமான காலகட்டத்தை கடக்க உதவி செய்ய வேண்டும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்கள். மேலும் இந்த நட்சத்திர ஜோடி பெங்களூரு குடும்ப நீதிமன்றத்தில் தங்களது விவாகரத்து மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

Mahalakshmi

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

54 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago