பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 49ஆம் நாளை நிறைவு செய்து 50-ஆம் நாளை எட்டியதையடுத்து, தொகுப்பாளர் விஜய் சேதுபதி போட்டியாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். “யாரெல்லாம் இவ்வளவு நாட்கள் இருப்பார்கள் என நினைக்கவில்லை” என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பெரும்பாலானோர் ரம்யா, சாண்ட்ரா, பிரஜின் உள்ளிட்டோரின் பெயர்களை கூறியுள்ளார். இதில் ரம்யா பெயர் அதிகமாகச் சொல்லப்பட்டதால் அவர் உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.
பின்னர் விஜய் சேதுபதி, நாமினேஷன் டிஸ்கஸ் குறித்துக் கேள்விகளை முன்வைத்தார். இந்த வார எவிக்ஷனுக்காக, வீட்டுக்குள் இரண்டு கார்கள் கொண்டு வரப்பட்டன. அதில் கெமி ஒரு காரிலும், பிரஜின் இன்னொரு காரிலும் ஏறி வெளியே செல்ல வேண்டும் என்றும், அதில் ஒருவர் மட்டுமே திரும்பி வருவார், வராதவர் வெளியேற்றப்படுவார் என்றும் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டது.
பிரஜின் வெளியேறும்போது சாண்ட்ரா கதறி அழுதபடி அவருடன் செல்ல முயன்றார். ஐந்து நிமிடங்கள் கழித்து பிரஜின் திரும்பி வந்ததும், சாண்ட்ரா உணர்ச்சிவசப்பட்டு மயங்கி விழுந்தார். இறுதியில், இந்த வாரம் கெமி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
சாண்ட்ரா பிரஜினுடன் ‘கப்பிள் கேம்’ விளையாடுகிறார் என்று விக்ரம் விமர்சித்த நிலையில், எவிக்ஷன் நேரத்தில் சாண்ட்ரா அதிகப்படியாக உணர்ச்சிவசப்பட்ட விதத்தை பார்த்து ரசிகர்கள் சாண்ட்ரா ஓவர் ஆக்டிங் செய்வதாக சோஷியல் மீடியாவில் கமென்ட் செய்து வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…
உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…
மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…
தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…