தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பை விட ஹிந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதன்படி தற்போது ஹிந்தியில் பிக்பாஸ் சீசன் 18 ஒளிபரப்பாகி வருகின்றது. இந்தி பிக்பாஸை வழக்கம் போல சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழ் பிரபலமான ஸ்ருதிகா அர்ஜூன் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புகழ்பெற்ற இவர் சூர்யாவுடன் ஸ்ரீ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பழம்பெரும் நகைச்சுவை நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியான இவர் சினிமாவை வீட்டை விலகிய நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். அந்த நிகழ்ச்சி மூலம் இன்றைய தலைமுறை ரசிகர்களிடம் நன்கு பிரபலமானார். இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் தனது டிரேட்மார்க் சேட்டைகளால் சல்மான் கானையும் கவர்ந்த இவர் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை அங்கேயும் உருவாக்கி விட்டார். பிக்பாஸ்ஹே சுருதிஹாவின் பேனாக மாறிவிட்டார். ஹிந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியும் தற்போது இறுதி கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் அனைவரும் பினாலே நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.
90 நாட்களைக் கடந்து ஸ்ருதிகா அர்ஜுன் பலமான போட்டியாளராக விளையாடி வந்தார். அடுத்த வாரம் ஃபைனல் இருக்கும் நிலையில் இந்த வாரம் மூவர் மட்டுமே நாமினேஷனில் இருந்தார்கள். அதில் ஸ்ருதிஹாவும் இருந்தார். அவரோடு இருந்த மற்ற பிரபலங்கள் ஹிந்தியின் பிரபலம் என்பதால் இது ஸ்ருதிஹாவிற்கு கடுமையான நாமினேஷன் ஆகவே இருந்தது. தமிழ் சின்னத்திரை பிரபலங்கள் தொடர்ச்சியாக ஸ்ருதிஹாவுக்கு வாக்கு கேட்டு வீடியோ வெளியிட்டு வந்தார்கள்.
ஆனால் துரதிஷ்டவசமாக வெற்றி கமிஷனரில் மக்களின் வாக்கு அடிப்படையில் ஸ்ருதிகா வெளியேற்றப்பட்டது ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இருப்பினும் பெரிய பிரபலமாக இல்லாமல் தோல்வி நடிகையாக இருந்தாலும் தன்னுடைய டிவி புகழை மட்டுமே வைத்துக் கொண்டு உள்ளே சென்ற இவர் 90 நாட்கள் தன்னுடைய ஆதிக்கத்தால் மிகப்பெரிய வரவேற்பு பெற்று தான் வெளியேறி இருக்கிறார் என்று அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் பிக்பாஸ் 18 வீட்டில் இருந்து வெளியேறிய ஸ்ருதிகா ஒரு வாரத்திற்கு ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…
தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…
பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…
வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…
கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே அதிவேகமாக வந்த டோயோட்டா ஃபார்ச்சூனர் சொகுசு கார் மோதியதில், சைக்கிளில் சென்ற…