விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் 2009 இல் வெளியான அபியும் நானும் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தார். இதை தொடர்ந்து உன்னை போல் ஒருவன், தனி ஒருவன், தொடரி போன்ற எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.
இவர் நிஷா கணேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நிஷா கணேஷ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளனியாக வலம் வந்தவர். இவர் பல சீரியல்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். கனா காணும் காலங்கள், தெய்வமகள், ஆபீஸ், சரவணன் மீனாட்சி ,தலையணை பூக்கள், மகாபாரதம் போன்ற பல்வேறு சீரியல்களில் நிஷா நடித்துள்ளார்.
சின்னத்திரையில் மட்டுமின்றி இவர் வெள்ளித்திரையிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். நடிகை நிஷாவும் , நடிகர் கணேஷும் 2017ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சமைரா என்ற மகளும் உள்ளார்.
திருமணம் முடிந்து தற்பொழுது எட்டு வருடங்களுக்கு பிறகு இரண்டாவது முறை கர்ப்பம் அடைந்தார் நிஷா. சமீபத்தில் இவருக்கு வளைகாப்பும் முடிந்தது. நேற்று இவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும், திரைப்பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…
தவெக அரசைக் கவிழ்க்க எதிர்க்கட்சிகள் எத்தகைய சதித் திட்டங்களைத் தீட்டினாலும், நம்பிக்கையில்லா தீர்மானம் போன்ற எத்தகைய நடவடிக்கையையும் எதிர்கொள்ளக் கட்சி…
தெலங்கானா மாநிலத்தில் கள்ளக்காதல் விவகாரத்தைப் பார்த்துவிட்டதாகக் கூறி 10-ஆம் வகுப்பு மாணவனுக்குக் குளிர்பானத்தில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துக் கொடூரமாகக்…
பெங்களூரில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த தனது சொந்த மகனைக் காதலனுடன் சேர்ந்து குளிர்பானத்தில் தூக்க மாத்திரை கொடுத்துத் துணிச்சலாகக் கழுத்தை…
தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் கைதாகிச் சிறையில் உள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை தாழ்வாழப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன். இவரது மனைவி தனபாக்கியம் (65). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.…
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே தாயுடன் தகாத உறவில் இருந்த முதியவரை, அவரது மகனே தனது நண்பர்களுடன் சேர்ந்து கத்தியால்…