விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது 82 நாட்களை பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் Freeze டாஸ்க் என்பதால் போட்டியாளர்களின் வீட்டில் இருந்து அனைவரும் வந்திருந்தார்கள். இந்த வாரம் குடும்பத்தினர் வாரம் என்பதால் மிகவும் எமோஷனலாகவே சென்றது. அது மட்டுமல்லாமல் நேற்றைய எபிசோடில் யாரும் எதிர்பாரா விதமாக போட்டியாளர்களின் நண்பர்கள் உள்ளே வந்திருந்தார்கள். மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.
இதுவரை பிக் பாஸ் சீசனில் நடைபெறாத ஒரு நிகழ்வு நடந்தது. அதாவது நேற்று சௌந்தர்யா விஷ்ணுவிற்கு ப்ரபோஸ் செய்த காட்சி நடைபெற்றது. இது பார்ப்பதற்கு மிகவும் க்யூட்டாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அருணின் காதலியான அர்ச்சனா உள்ளே வந்திருந்தார். இவர் கடந்த சீசனின் வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய எபிசோடு பார்க்கும்போது பிக் பாஸ் காதல் ஜோடிகளின் களமாக மாறிவிட்டது போல் தெரிந்தது. நேற்று வார இறுதி விஜய் சேதுபதி எபிசோடு என்பதால் பல எதிர்பார்ப்புகள் இருந்தது. இந்த வாரம் டபுள் எவிக்ஷன் என்று தகவல் வெளிவந்த நிலையில் விஜய் சேதுபதி Eviction கார்டோடு வந்து ஒருவரை எவிக்ட் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்று கூறினார்.
இதனை தொடர்ந்து போட்டியாளர் ஜெஃப்ரி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டில் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜெப்ரி ஒரு நாளைக்கு பத்தாயிரம் ரூபாய் பேசப்பட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். தற்போது அவர் இருந்த 83 நாட்களுக்கு அவருக்கு 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் நன்றாக கேம் விளையாடி வந்த போட்டியாளர்களில் இவரும் ஒருவராக இருந்ததால் அவரின் எலிமினேஷன் ஏற்க முடியாத ஒன்றாக இருப்பதாக பிக் பாஸ் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…