‘பிக் பாஸ்’ போட்டியாளர் சரவணனின் குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? வைரலாகும் புகைப்படம்….

By Samrin on வைகாசி 15, 2023

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சரவணன் இவர் அக்டோபர் 10 ஆம் தேதி  1966 ஆம் ஆண்டு பிறந்தார்.

   

இவர் சேலம் மாவட்டத்தை பூர்விகமாகக் கொண்டவர் .இவரது தந்தை காவல்துறை கண்காணிப்பாளர், தாய் ஒரு செவிலியர் .

   

 

இவர் சேலம் அரசு கலைக்கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். சென்னையில் சென்று அடையாறு திரைப்படக் கல்லூரியில் நடிப்புக் கல்வியை பயின்றார்.

இவர் கவிதை எழுதுவதில் மிகவும் ஆர்வம் உள்ளவர். இதை தொடர்ந்து இவர் 1991 ஆம் ஆண்டு வெளியான ‘வைதேகி வந்தாச்சு’ என்ற படத்தின் மூலமாக  தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

 

அதை தொடர்ந்து அபிராமி ,மாமியார் வீடு, நல்லதே நடக்கும் ,தாய் மனசு ,சந்தோசம் ,திரும்பிப்பார் போன்ற படங்களில் நடித்தார்.

இவர் 1991 முதல் 1998 வரை முன்னணி  நடிகராக வலம் வந்தார். இதை தொடர்ந்து நடிகர் அமீர்  இயக்கத்தில் வெளியான படம் ‘பருத்திவீரன்’இப்படத்தில்  கார்த்திகின்  சித்தப்பாவாக நடித்து  மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

இப்படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விஜய் விருதையும் ,சிறந்த துணை நடிகருக்கான பிலிம் பேர் விருதையும் பெற்றார் .

அதன் பிறகு இவர் ஒரு சில படங்கள் நடித்து இருந்தாலும் அது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெறவில்லை.

2019 ஆம் ஆண்டு விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன்3’யில் பங்கு பெற்றார் அதன் மூலம் மேலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

தற்போது இவர் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் பிஸியாக நடித்து வருகிறார் .நடிகர்  சரவணன் சூரியஸ்ரீ  என்பவரை காதலித்துதிருமணம் செய்து கொண்டார்.

பிறகு இவர்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் இவர் மனைவியே இவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துள்ளார்.

தற்போது இவரது முதல்  மனைவி சூர்யா பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.அந்த புகாரில்  நான் சம்பாதித்த பணம் மற்றும் நகையை வைத்து வீடு வாங்கினார்.

அதையும் அவர் பெயரிலேயே எழுதிக் கொண்டார். அவருக்கு பட வாய்ப்பு இல்லாத போது என் சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிட்டார்.

‘பிக் பாஸ்’ என்று வந்த பிறகு அவர் கையில் பணம் வந்தவுடன் ஸ்ரீதேவி என்னும் பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சரவணன் 30 அடியாட்களுடன் தனது வீட்டிற்கு வந்து, வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆபாசமாக பேசி மிரட்டுகிறார்.

அரசு தலையிட்டு உரிய நியாயத்தை பெற்று தர வேண்டும் என்று புகார் விடுத்துள்ளார். தற்போது இந்நிலையில் இவரின் குடும்ப புகைப்படமானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.