பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் ரவீந்தர், அர்ணவ், தர்ஷா குப்தா, சுனிதா மற்றும் ரியா ஆகிய ஐந்து பேர் இதுவரை எலிமினேட் ஆகியுள்ளனர். இதனைத் தவிர சமீபத்தில் ஆறு வைல்டு கார்டு போட்டியாளர்களை பிக்பாஸ் வீட்டுக்குள் களம் இறக்கியது. இதனைத் தொடர்ந்து மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்தனர்.
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பிரிக்கப்பட்ட அவர்களுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. ஆனால் பிக் பாஸ் குழுவின் இந்த புது பிளான் வொர்க் அவுட் ஆகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாக இருப்பது டல் அடிக்கும் வகையில் இருப்பதால் பிக் பாஸ் இந்த பாய்ஸ் வெர்ஷன் கேர்ள்ஸ் என்ற நடைமுறையை கைவிட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐம்பது நாட்கள் ஆகிவிட்ட நிலையில் வீட்டில் கூட்டம் குறைந்தபாடில்லை.
இதனால் இனி வரும் பாரங்களில் டபுள் எவிக்ஷன் இருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இந்த வாரம் ஒரு நபர் மட்டுமே எலிமினேட் ஆகி இருக்கிறார். இந்த வார நாமினேஷனில் மொத்தம் 13 பேருக்கு இருந்த நிலையில் இவர்களில் வைல்டு கார்டு போட்டியாளரான வர்ஷினி வெங்கட் மக்கள் மத்தியில் குறைந்த வாக்குகளை பெற்று இந்த வாரம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
இவர் மூன்று வாரங்கள் மட்டுமே பிக் பாஸ் வீட்டுக்குள் தாக்குப் பிடித்த நிலையில் நேற்று அவர் அதிரடியாக வீட்டிலிருந்து எலிமினேட் ஆகினார். இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் மூன்று வாரங்கள் இருந்த வர்ஷினி இதற்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஒரு நாளைக்கு 12,000 என மொத்த மூன்று வாரங்களுக்கு சேர்த்து அவர் 2,52,000 சம்பளமாக பெற்றுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…