தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். சமீப காலமாகவே தன்னுடைய அப்பாவுடன் பல மேடைகளில் தோன்றி வருகிறார். இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
இவர்களின் இந்த விவாகரத்து செய்து ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலகினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் விவாகரத்து அறிவித்த அடுத்த 1 மணிநேரத்திலேயே அவரிடம் பணியாற்றி வரும் இசைக்கலைஞரான மோகினி டே என்பவரும் தன் கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனால் இருவரையும் தொடர்புபடுத்தி சில செய்திகள் வெளிவந்தது. இதனால் கடுப்பான ஏ.ஆர்.ரகுமான், தன்னைப்பற்றிய அவதூறு கருத்துக்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று எச்சரித்தார். மேலும் சாய்ரா பானுவும் தேவையில்லாத வதந்தியை பரப்ப வேண்டாம் என எச்சரித்தார்.
இந்த விவகாரத்தை தொடர்ந்து ஏ ஆர் ரகுமான் பற்றி யாருக்கும் தெரியாத பல விஷயங்கள் குறித்து இணையவாசிகள் தேடிக் கொண்டு வருகிறார்கள். இவர் எப்போதுமே அதிகம் பேசாமல் குறைவாக பேசக்கூடிய ஒரு ஆள், அதனைப் போல மற்றவர்களை பற்றி பின்னாடி பேசுவது அவருக்கு சுத்தமாகவே பிடிக்காது. இவர் இசையமைப்பாளராக அறிமுகமாவதற்கு முன்பு முதலில் இளையராஜாவிடம் தான் உதவியாளராக பணியாற்றினார். அதன் பிறகு தான் மெல்ல மெல்ல வளர்ந்து சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். தற்போது ஏ ஆர் ரகுமான் ஒரு டீசர்ட் அணிந்து கொண்டு இளையராஜா உடன் ஸ்டுடியோவில் மற்ற பணியாளர்களுடன் நின்று கொண்டு நோட்ஸ் எடுக்கும் ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…
சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…
கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…
பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…
தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…
ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…