டிக் டாக் மூலம் பிரபலமடைந்து இன்று மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த பிரபலங்களில் ஒருவர்தான் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் அருகே உடன்குடி அருகே வெங்கடாசலப்புரத்தை சேர்ந்த இவர் காமெடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். டிக் டாக் செயலிக்கு பிறகு பேஸ்புக் மற்றும் யூடியூப் போன்ற செயல்களில் வீடியோ பகிர்ந்து வந்தார்.
இப்படி வீடியோக்களை மட்டும் வெளியிட்டு வந்த இவருக்கு பிக் பாஸ் சீசன் சிக்ஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே இருந்து வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பிறகு சன்னி லியோன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அது மட்டுமல்லாமல் அஜித் நடிப்பில் வெளியான முடிவு திரைப்படத்திலும் இவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் இவர் கவனம் செலுத்தி வருகின்றார். இந்த நிலையில் ஜிபி முத்து சமீபத்தில் சொந்தமாக புதிய கார் ஒன்றை வாங்கி இருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது அவரின் ஊரில் சொந்தமாக நிலம் வாங்கியுள்ளார். 40 சென்ட் நிலம் வாங்கி இருக்கும் நிலையில் அதில் இருக்கும் கருவேல மரங்களை வெட்டிவிட்டு அந்த இடத்தில் தோட்டம் அமைக்கப் போவதாக ஜிபி முத்து கூறி ஒரு வீடியோ வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரபிரதேசத்தில் ஒரு பஞ்சர் கடை நடத்தி வரும் மெக்கானிக் பிரஜாபதி என்பவருக்கு ரூ100 கோடி வர்த்தகத்திற்கான ஜிஎஸ்டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் எந்தக் கூட்டணியிலும் இல்லை என்று அறிவித்துள்ளது. இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, திமுகவுக்கு…
மொஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை 26.06.2026 அன்று அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அன்று பள்ளிகள், கல்லூரிகள்,…
மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…
பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…
சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…