வெளிநாட்டில் ‘பாடி பில்டர்’ கணவருடன் ஜாலியாக ஊர் சுற்றும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் நடிகை… இதோ அழகிய வீடியோ…

By Begam on ஆடி 8, 2023

Spread the love

நாதஸ்வரம் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ஷண்முகபிரியா. வாணி ராணி, கல்யாண பரிசு, பாரதி கண்ணம்மா ஆகிய சீரியல்களில் நடித்து பெரும் புகழ் பெற்றார் ஸ்ருதி. சினிமா பின்புலம் இல்லாமல் வந்த ஸ்ருதி தனது நடிப்பு திறமையால் வளர்ந்தார்.

   

விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதிக்கு அக்காவாக நடித்தார் ஸ்ருதி. பின்னர் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இதனை தொடர்ந்து ஃபிரஞ்சு படிப்பில் கவனம் செலுத்திய ஸ்ருதி ஷண்முகப்பிரியா சீரியல்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

   

 

 

இதைத்தொடர்ந்து அரவிந்த் சேகர் என்ற பாடி பில்டரை திருமணம் செய்து கொண்டார் . இவர்களது திருமணத்தில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். நடிகை ஸ்ருதியின் திருமண போட்டோக்களும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது தனது கணவருடன் இணைந்து பாரிசிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட அழகிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ…

 

View this post on Instagram

 

A post shared by arvindshekar (@arvind__shekar)