Categories: சினிமா

வீட்டை விற்று பாரதிராஜா எடுத்த படம்… பயமுறுத்திய இளையராஜா- கடைசியில் நடந்த மேஜிக்!

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய படங்களால் ஒரு புதிய அலையை உருவாக்கியவர் பாரதிராஜா. வரிசையாக ஹிட் படங்களைக் கொடுத்து வந்த அவருக்கு இடையில் ஒரு சிறு தேக்கம் ஏற்பட்டு சில தோல்விப் படங்களைக் கொடுத்தார். அதன் பிறகு அவர் தானே தயாரித்து இயக்கிய திரைப்படம்தான் முதல் மரியாதை.

சிவாஜி, ராதா, வடிவுக்கரசி மற்றும் ஜனகராஜ் நடிப்பில் இளையராஜா இசையில் உருவான முதல் மரியாதை படத்தின் கதையை எழுதியவர் செல்வராஜ். பாரதிராஜாவின் பல படங்களில் கதாசிரியராக பணி ஆற்றியவர் ஆர் செல்வராஜ். இந்த படத்துக்காக செல்வராஜ் நிறைய கதைகளை யோசிக்க எதுவும் திருப்தியாக இல்லை.

ஒரு கணத்தில் அவருக்கு கதைக்கான பொறி தட்டியுள்ளது. ரஷ்ய எழுத்தாளரான தாதாவெஸ்கி தன்னுடைய முதிர்வு வயதில் தனக்காக டைப்பிஸ்ட் வேலைக்கு அமர்த்தப்பட்ட பெண்ணிடம் காதல் வயப்பட்டார். மேலும் அப்பெண்ணும் இவருடைய எழுத்தில் மயங்கினார். இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வரலாறு. இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம். இந்த கதை செல்வராஜுக்கு பொறி தட்டியது. இதை வைத்து முதல் மரியாதைக் கதையை எழுதினார்.

பாரதிராஜாவுக்கும் கதை பிடித்துவிட திரைக்கதை அமைத்து ஷூட்டிங்கை விறுவிறுவென நடத்தி முடித்துள்ளார். இந்த படத்துக்காக தன்னுடைய வீட்டிஅ விற்றுதான் அவர் பணத்தை தயார் செய்துள்ளார். படத்தை இளையராஜாவுக்குப் போட்டுக் காட்டியுள்ளார். ஆனால் அவரோ இந்த படம் தனக்குப் பிடிக்கவில்லை என்றும் படம் ஓடாது என்றும் பேசியுள்ளார். அதனால் சம்பளமே வாங்கிக் கொள்ளாமல் படத்துக்கு இசையமைத்துள்ளார்.

ஆனாலும் தனக்கு பிடிக்காத படத்துக்கும் மிகச்சிறப்பான பின்னணி இசையை அமைத்துக்கொடுத்துள்ளார். படம் ரிலீஸான போது இளையராஜாவின் கருத்துக்கு எதிராக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தை ரஷ்யாவில் வெளியிட விரும்பிய ரஷ்ய விநியோக நிறுவனம் ஒன்று 100 பிரிண்ட்களை ஒரு கோடி ரூபாய் கொடுத்து வாங்கிக் கொண்டதாம். இதனால் இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியால் நல்ல லாபத்தை பெற்றாராம் இயக்குனர் பாரதிராஜா.

vinoth

Recent Posts

தன்னைவிட 41 வயது இளையவரின் காலில் விழுந்து வணங்கிய பாஜக எம்எல்ஏ… பரபரப்பை கிளப்பும் ஷாக்கிங் வீடியோ…!

பாஜக எம் பி யும் மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சருமான ஜோதிராதித்யா இந்தியாவின் மகன் காலில் 73 வயது பாஜக…

5 minutes ago

தமிழக அரசியலில் புதிய திருப்பம்… திடீரென அந்தர் பல்டி அடித்த ராமதாஸ்… திமுகவுக்கு ஆதரவு… பரபரப்பு பேட்டி…!

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனிடையே அன்புமணி தரப்பு…

13 minutes ago

திடீர் திருப்பம்… 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியில்லை… சற்றுமுன் பரபரப்பு அறிவிப்பு…!

பாமகவில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. இதனிடையே அன்புமணி தரப்பு…

18 minutes ago

“அடுத்த துணை முதல்வர் செல்வப்பெருந்தகை”.. காங்கிரஸ் பரபரப்பு போஸ்டர்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள் கூடுதல் தொகுதிகளை…

25 minutes ago

BREAKING: ஜனநாயகன் ரிலீஸில் அடுத்த சிக்கல்… உயர்நீதிமன்ற தீர்ப்பு வெளியான உடனே விஜய்க்கு ஷாக்… சற்றுமுன் பரபரப்பு தகவல்…!

நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி…

31 minutes ago

1 இல்ல 2 இல்ல 69 ஆண்டுகளாக வாயில் கல்லை வைத்துக் கொண்டே இருக்கும் முதியவர்… முக்கூடலில் ருசிகரம்…!

நெல்லை மாவட்டம் முக்கூடல் பாலகன் தெருவை சேர்ந்த கோவிந்தசாமி என்ற 80 வயது முதியவர் ஆரம்பகாலங்களில் எலக்ட்ரீசியன் மற்றும் சைக்கிள்…

37 minutes ago