Categories: CINEMA

வளையல் கடை வைத்திருந்த இளைஞரை ஹீரோவாக்கிய இயக்குனர் பாரதிராஜா… பலரும் அறியாத தகவல்!

தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ஒரு சில இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். அவர் இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் தமிழ் சினிமாவையே புரட்டி போட்டது. தொடர்ந்து ரத்தமும் சதையுமான கிராமிய மணம் கொண்ட படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

அவர் தன்னை ஒரு இயக்குனராக நிலைநிறுத்திக் கொண்ட பின்னரும் தனது படங்களுக்கு முன்னணி நடிகர்களை தேடி செல்லாமல் புதுமுக நடிகர்களையே பெரும்பாலும் பயன்படுத்தினார்.  அதுமட்டுமில்லாமல அவர்களை நட்சத்திரங்களாக உருவாக்கினார். அதற்குக் காரணம் முன்னணி நடிகர்களை போட்டால் அவர்களை வைத்து நாம் எடுக்க நினைத்ததை எடுக்க முடியாது என அவர் நம்பியதே அதற்கு காரணம். அவர் அறிமுகப்படுத்திய ராதா, ரேவதி, ராதிகா, ரேகா உள்ளிட்ட நடிகைகள் தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகள் என பெயரெடுத்தனர்.

அப்படி அவர் மண்வாசனை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தியவர்தான் நடிகர் பாண்டியன்.  மண்வாசனை படத்துக்காக அவர் பாண்டியனை தேர்வு செய்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம்தான். மண்வாசனை படத்தின் கதாநாயகன் வீரய்யா பாத்திரத்துகு

ஒரு புதிய முகத்தை தேடி ஊர் ஊராக சென்று பலரையும் பார்த்துள்ளார் பாரதிராஜா. ஆனால் அவருக்கு யாரும் திருப்தியாக தோன்றவில்லை. அப்போதுதான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். கோவிலை விட்டு வெளியே வரும்போது அங்கே ஒரு இளைஞர் வளையல் கடை வைத்திருந்தார். அவரை பார்த்ததும் பாரதிராஜாவுக்கு ஏதோ ஒரு பொறிதட்டியது. அந்த வாலிபருக்கும் பாரதிராஜாவை தெரிந்திருந்தது. அவர் பாரதிராஜாவுக்கு சோடா வாங்கி கொடுத்து கவனித்துள்ளார்.

அவரை காரில் ஏற்றிக்கொண்டு அவர் தங்கியிருந்த விடுதிக்கு போனார் பாரதிராஜா. அவரை ‘சிரி’ என்றார்.. ‘கோபப்படு’ என்றார்.. உடனே, இவர்தான் மண்வாசனை ஹீரோ என முடிவு செய்தார். அந்த வாலிபர்தான் பாண்டியன்.  இதை மண்வாசனை படத்தின் தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணனே ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார். மண்வாசனை படத்தின் மூலம் கவனம் பெற்ற பாண்டியன் அதன்பின் 85க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாண்டியன் நடித்தார்.

vinoth

Recent Posts

ஒரு டைரக்டரா, ஒரு அண்ணனா நடிகர் தனுஷுக்கு அட்வைஸ் கொடுத்த செல்வராகவன்… என்ன சொல்லிருக்காரு தெரியுமா..?

ராயன் படத்தின் ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் இயக்குனர் செல்வராகவன் தனது தம்பி மற்றும் நடிகரான தனுஷ் குறித்து பேசிய விஷயங்கள்…

2 மணி நேரங்கள் ago

42 லட்சம் மோசடி, பணம் கேட்டு டார்ச்சர்.. ஸ்டுடியோ அதிபர் மீது நடிகர் பார்த்திபன் பரபரப்பு புகார்.. அதிர்ச்சியில் திரையுலகம்..

டீன்ஸ் திரைப்படத்தின் கிராபிக் மேற்பார்வையாளர் மீது பார்த்திபன் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருக்கின்றார். தமிழ் சினிமாவில் பிரபல…

3 மணி நேரங்கள் ago

ஸ்கூல் படிக்கும்போதே தனுஷ் அப்படி தான்.. அவரால தான் நான் 8-வது பாஸ் ஆனேன்.. மனம் திறந்து பேசிய நடன இயக்குனர்..!!

முன்னணி நடிகரான தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம் படத்தின் மூலம் பாபா பாஸ்கர் நடன கலைஞராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார்.…

3 மணி நேரங்கள் ago

70 வயசிலும் நிற்க நேரமில்லாமல் ஓடும் உலக நாயகன்.. கமலுக்கு ஆல் இன் ஆல் அழகு ராஜாவாக செயல்படும் நபர்..!!

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். வருகிற 12-ஆம் தேதி இந்தியன்…

17 மணி நேரங்கள் ago

கோடி கோடியா சம்பாதிச்சேன்.. ஆனா இப்போ 200 ரூபாய்க்கு நடிச்சிட்டு இருக்கேன்.. எமோஷனலாக பேசிய நடிகர்..!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர் TSR தர்மராஜ். முதலில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்று தர்மராஜ் வாய்ப்பு கேட்க…

18 மணி நேரங்கள் ago

முரளி வீட்டில் என் பொண்ண கட்டி கொடுக்க பயந்தேன்.. அந்த ஒரு சம்பவத்தால எல்லாம் மாறிடுச்சு.. மனம் திறந்து பேசிய தயாரிப்பாளர்..!!

80ஸ் 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் முரளி. இவருக்கு காவியா என்ற மகளும், அதர்வா,…

18 மணி நேரங்கள் ago