தமிழ் சினிமாவின் இயக்குனர் இமயம் என்று கொண்டாடப்படுபவர் தான் இயக்குனர் பாரதிராஜா. 16 வயதினிலே திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமாகி பல கிராம பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி மாபெரும் வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய 80 வயதில் மாடர்ன் லவ் என்ற வெப் சீரிஸில் பறவைகள் கூட்டில் வாழும் மான்கள் என்ற ஒரு பகுதியை இயக்கி, வயது, காலம் மற்றும் தலைமுறைகள் அனைத்தையும் தாண்டி காலத்தால் அழியாத அசல் கலைஞராக சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழ் சினிமாவிலேயே யாரும் செய்யாததை செய்து காட்டிய இயக்குனர் என்ற பெருமைக்குரியவர்.
அதாவது பாரதிராஜா இயக்கிய முக்கியமான படங்களில் ஒன்றுதான் 16 வயதினிலே. அதுவரை கிராமங்களை நோக்கி திரும்பாத தமிழ் சினிமாவின் கவனம் இந்த படத்திற்கு பிறகு திரும்பியது என்றே சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு 16 வயதினிலே படத்திற்கு பிறகு நிறைய கிராமத்து படங்கள் வரத் தொடங்கியது. இந்தப் படத்தில் கமல் சப்பானி என்ற கதாபாத்திரத்தில் ஒரு அப்பாவித்தனமான நபராக நடித்திருப்பார். இதில் ஸ்ரீதேவி மற்றும் ரஜினி ஆகியோரின் நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது.
மேலும் இந்த படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த படத்திற்கு முன்பு வரை பெரும்பாலும் பட காட்சிகள் அனைத்தும் ஒரு ஸ்டூடியோவில் தான் படமாக்கப்பட்டன. தமிழ் சினிமாவிலேயே முதல் முறையாக வெளிப்புற ஷூட்டிங் நடத்தியவர் பாரதிராஜா தான். இந்த படத்தில் கிராமங்களுக்கு சென்று அற்புதமாக காட்சிகளை படமெடுத்து சினிமாவிற்கு கொடுத்திருப்பார். சினிமாவில் முதல் முறையாக வெளிப்புற படப்பிடிப்பு எடுத்த பெருமை பாரதிராஜாவுக்கு தான் சேரும். தமிழ் சினிமாவில் யாருமே செய்யாததை முதல் முறையாக செய்து காட்டியவர் பாரதிராஜா தான். அதனாலயே இன்றும் தமிழ் சினிமாவில் இவருக்கென்று ஒரு தனி சிறப்பு உள்ளது.
கணவருக்குப் பிற பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது மட்டுமே, மனைவிக்கு அவர் கொடுமை இழைத்ததாகக் கருத இயலாது என்று…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் திடீரென ஒரு பிரதான சாலை பாதாளத்திற்குள் உள்வாங்கி பெரும் பள்ளம் உருவான சம்பவம் பொதுமக்களிடையே…
சிங்காரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பேக்கரி உரிமையாளர் திருநாவுக்கரசு என்பவரது மகன் சஞ்சய் (12), அங்குள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு…
உத்தரப் பிரதேச மாநிலம் ஃபதேபூரில் ரேஷன் கடைக்குச் சென்ற மூதாட்டி மீது முன்விரோதம் காரணமாக வன்முறைக் கும்பல் ஒன்று கொடூரத்…
ஆந்திரப் பிரதேச மாநிலம் அல்லூரி மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி மண்டலம், பினகோட்டா அருகே சுரங்கப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென…
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது தேர்தல் பிரசார மேடைகளில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தொடர்ந்து பேசி வருகிறார். அதன்…