விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி நிறைவடைந்த சீரியல் ;பாரதி கண்ணம்மா’. இந்த தொடரில் ரோஷினி மற்றும் அருண் இருவரும் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். ஆரம்பத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் விரும்பப்பட்ட இந்த சீரியல் நாட்கள் செல்ல செல்ல போர் அடிக்க ஆரம்பித்தது.

முதல் பாகம் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் முடிந்தது. இதைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஒரு பாரதி கண்ணம்மா சீரியல் முடிவுக்கும் வந்தது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவுக்கு உதவி செய்யும் நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஷெரின்.

இவர் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புதிய சூப்பர் ஹிட் சீரியல் ஒன்றில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த சீரியல் வேறு எதுவும் இல்லை. தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்பட்டு வரும் ஆகா கல்யாணம் சீரியல் தான். இந்த சீரியலுக்கு தற்பொழுது ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த சீரியலில் ஒவ்வொருவரும் தங்களது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். இந்த தொடரில் தற்பொழுது ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் களமிறங்க உள்ளார் நடிகை ஷெரின் ஜானு. இது தொடர்பான அறிவிப்பு தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
View this post on Instagram
