மத்தியப் பிரதேசத்தில் பிச்சை எடுத்து வந்த மங்கிலால் என்ற நபர், தற்போது ஒரு கோடீஸ்வரராக உருவெடுத்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநில அரசு சமீபத்தில் மேற்கொண்ட ‘பிச்சைக்காரர்கள் இல்லாத நகரம்’ என்ற விழிப்புணர்வு மற்றும் மீட்பு நடவடிக்கையின் போது, இந்த நபரின் பின்னணி குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. மங்கிலால் பிச்சை எடுத்துச் சேர்த்த வருமானத்தில் மூன்று கான்கிரீட் வீடுகள், மூன்று ஆட்டோக்கள் மற்றும் ஒரு மாருதி சுசுகி கார் என பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை வாங்கியுள்ளார். உடல் ஊனமுற்றவர் என்பதால் அரசின் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டை இலவசமாகப் பெற்ற அவர், பிச்சை எடுப்பதையே ஒரு முழுநேரத் தொழிலாகக் கொண்டு இவ்வளவு பெரிய சொத்துக்களைக் குவித்துள்ளார்.
மங்கிலால் தனது வீடுகள் மற்றும் வாகனங்களை வாடகைக்கு விட்டு வருமானம் ஈட்டுவதுடன், கைவசம் இருக்கும் பணத்தை வட்டிக்கு விட்டும் சம்பாதித்து வருகிறார். இத்தனை வசதிகள் இருந்தும், அவர் தினமும் கடைவீதிகளில் பிச்சை எடுத்து 400 முதல் 500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். பிச்சை எடுக்கும் தொழிலின் மூலம் ஒருவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக மாறியிருப்பது அதிகாரிகளையும் பொதுமக்களையும் ஒருசேர திகைக்க வைத்துள்ளது. பிச்சை எடுப்பவர்களின் உண்மை நிலையை ஆராயாமல் உதவி செய்பவர்களுக்கு, இந்தச் சம்பவம் ஒரு விழிப்புணர்வு செய்தியாக அமைந்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…