இந்தியாவில் வங்கி விடுமுறையை பொருத்தவரையில் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும் திருவிழா மற்றும் விசேஷ நாட்களுக்கு ஏற்றவாறு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. இதனால் ஒவ்வொரு மாநிலத்திற்கு வங்கி விடுமுறை மாறுபடும். தற்போது டிசம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்தில் மொத்தம் 18 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.
1. டிசம்பர் 1, திங்கள் – பழங்குடி நம்பிக்கை தினம் (அருணாச்சலப் பிரதேசம்)-
2. டிசம்பர் 3, புதன்கிழமை – புனித பிரான்சிஸ் சவேரியார் (கோவா) விழா.
3. டிசம்பர் 12, வெள்ளி – பா டோகன் நெங்மிஞ்சா சங்மா தினம் (மேகாலயா)
4. டிசம்பர் 18, வியாழன் – குரு காசிதாஸ் ஜெயந்தி (சத்தீஸ்கர்)
5. டிசம்பர் 19, வெள்ளிக்கிழமை – கோவா விடுதலை தினம் (கோவா)
6. டிசம்பர் 24, புதன்கிழமை – கிறிஸ்துமஸ் ஈவ் (மேகாலயா, மிசோரம்)
7. டிசம்பர் 25, வியாழன் – கிறிஸ்துமஸ் (பெரும்பாலான மாநிலங்களில் விடுமுறை.) –
8.டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (மேகாலயா, மிசோரம், தெலுங்கானா)
9.டிசம்பர் 26 – தியாகி உதம் சிங் பிறந்த நாள் (ஹரியானா)
10.டிசம்பர் 27, சனிக்கிழமை – குரு கோவிந்த் சிங் ஜெயந்தி (ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம்)
11.டிசம்பர் 30 – யு கியாங் நங்பா தினம் (மேகாலயா), தமு லோசர் (சிக்கிம்)
12.டிசம்பர் 31, புதன்கிழமை – புத்தாண்டு (மிசோரம், மணிப்பூர்)
இதனை தவிர டிசம்பர் 7 ஞாயிற்றுகிழமை, டிசம்பர் 13 இரண்டாவது சனிக்கிழமை, டிசம்பர் 27 நான்காவது சனிக்கிழமை, டிசம்பர் 14, 21,28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…