நாடு முழுவதும் அனைத்து வங்கிகளுக்கும் அரசு விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் விடுமுறை அளிக்கப்படும். இதனைத் தவிர்த்து ஒவ்வொரு மாநிலத்தை பொறுத்து வங்கிகளுக்கு விடுமுறை என்பது மாறுபடும். இதனால் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாதத்திற்கு முன்னதாகவே வங்கிகள் விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி அக்டோபர் மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகை நாட்கள் வருவதால் மொத்தம் 21 நாட்கள் வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும்.
அக்டோபர் மாதம் நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் 5, 12, 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும். மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையான அக்டோபர் 11 மற்றும் மாதத்தின் நான்காவது சனிக்கிழமையான அக்டோபர் 25 ஆகிய நாட்களிலும் நாடு தழுவிய வங்கி விடுமுறையாக இருக்கும். மேலும், வெவ்வேறு மாநிலங்களில் உள்ளூர் பண்டிகைகள் காரணமாக அக்டோபர் 1, 2, 3, 4, 6, 7, 10, 18, 20, 21, 22, 23, 27, 28, 31 ஆகிய தேதிகளில் வங்கிகள் இயங்காது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…