சென்னை அடையாறில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை மேலாளரை, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடையாறு பகுதியில் கயல்விழிக்குச் சொந்தமான கட்டடத்தில் எஸ்பிஐ வங்கியின் என்.ஆர்.ஐ கிளை செயல்பட்டு வருகிறது. இக்கிளையின் மேலாளராக ஹர்ஷீன் சிங் என்பவர் பணியாற்றி வரும் நிலையில், வங்கியின் லிப்ட்டில் திடீரென பழுது ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கயல்விழியின் உதவியாளரைத் தொடர்பு கொள்ள முயன்றும் அவர் அழைப்பை ஏற்காததால், மேலாளர் ஹர்ஷீன் சிங் நேரடியாக கயல்விழியைத் தொடர்பு கொண்டு லிப்ட் பிரச்சனை குறித்து தெரிவித்துள்ளார்.
தமக்கு நேரடியாக போன் செய்து தகவல் கூறியதால் கடும் ஆத்திரமடைந்த கயல்விழி, உடனடியாக வங்கி கிளைக்கு நேரில் வந்துள்ளார். அங்கு மேலாளர் ஹர்ஷீன் சிங்கிடம் போன் செய்தது தொடர்பாகக் கோபத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மேலாளர் தனது இரு கைகளையும் கன்னத்தில் வைத்தபடி அமர்ந்திருக்க, மேலும் ஆத்திரமடைந்த கயல்விழி அனைவரின் முன்னிலையிலும் மேலாளரின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த அத்துமீறல் சம்பவம் வங்கியிலிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் துல்லியமாகப் பதிவாகியுள்ளது.
வங்கி மேலாளர் மீதான இந்தத் தாக்குதல் சம்பவத்திற்குப் பிறகு, அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாகப் பொது இடத்தில் அரசு வங்கி அதிகாரியைத் தாக்கிய கயல்விழி மீது உரியச் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வங்கியின் முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல் நிலையத்தில் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளார். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…