விஜய் டிவியில் மிகவும் பிரபலமான செயல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. குடும்ப தலைவியின் கதையை மையமாகக் கொண்ட இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இன்று வரை விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் டிஆர்பி யில் முன்னணி இடத்தில் இருந்து வருகின்றது. தற்போது சீரியல் புதிய கதைகளத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ராமமூர்த்தியின் இறப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்பத்தினர் அனைவரும் ராமமூர்த்தியின் இறப்பால் சோகத்தில் உள்ள நிலையில் இன்றைய எபிசோடில் கோபி ராமமூர்த்திக்கு எந்தஒரு இறுதி சடங்கையும் செய்யக்கூடாது என ஈஸ்வரி கூறுகிறார். அனைவரும் எவ்வளவு எடுத்துக் கூறியும் தன் பேச்சிலிருந்து சற்றும் பின்வாங்காத ஈஸ்வரி தன் மருமகள் தான் என் கணவருக்கு அனைத்து சடங்குகளையும் மகளாக செய்ய வேண்டும் என கூறுகிறார். மற்றொரு பெண்ணாக இருந்தால் கோபி செய்த காரியங்களுக்கு பிள்ளைகள் அனைவரையும் விட்டுவிட்டு எங்கேயோ சென்று இருக்க வேண்டும்.
ஆனால் பாக்யா அப்படி இல்லாமல் 18 வயதில் இந்த வீட்டிற்கு வந்து இன்று வரை எங்களுக்காக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இவளைத் தவிர யாராலும் எங்களை நன்றாக பார்த்துக் கொள்ள முடியாது. இதனால் என் கணவருக்கு அனைத்து காரியங்களையும் பாக்கியா செய்ய வேண்டுமென ஈஸ்வரி கூற கோபி கெஞ்சுகிறார். ஆனால் இறுதியாக பாக்கியா தான் அனைத்து காரியங்களையும் செய்ய செல்கிறார். எந்த ஒரு மகனுக்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என்று ராதிகாவிடம் குழம்பிக் கொண்டு கோபி நிற்கதியாய் நிற்கிறார். இப்படி இன்றைய எபிசோடு முடிவடைய நாளை ராமமூர்த்தியின் இறுதி சடங்குகள் அனைத்தும் நடைபெறும் என தெரிகிறது.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது. சமீபத்தில்…
உத்தரப்பிரதேச மாநிலம் பெரோசாபாத் மாவட்டத்தில், குடிபோதைக்கு அடிமையான தந்தை ஒருவன் தனது 12 வயது மகனை கத்தியால் குத்திக்கொலை செய்து,…
தமிழக அரசியலில் 'என்ஜின்' குறித்த விவாதம் தற்போது அண்ணாமலை மற்றும் விஜய் இடையேயான வார்த்தைப் போராக உருவெடுத்துள்ளது. தமிழக வெற்றிக்…
தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஏற்படுத்தி வரும் தாக்கம் குறித்து பாஜகவின் டெல்லி தலைமைக்கு…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், காங்கிரஸ் கட்சி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி…
தமிழக அரசியலில் தற்போதைய பேசுபொருளாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) மீதான ஆர்வம், இளைஞர்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில்…