Categories: சினிமா

படத்துல கூட இப்படி யாரும் யோசிச்சிருக்க மாட்டாங்க… செம்மயா நாடகம் ஆடி ஏவிஎம் நிறுவனத்தைப் பணிய வைத்த நடிகை!

Spread the love

தமிழ் சினிமாவின் புராதனமான சினிமா ஸ்டுடியோக்களில் ஒன்று ஏவிஎம் நிறுவனம். தமிழ் சினிமா பேசத்தொடங்கியதில் இன்றுவரை சினிமா தொழிலில் அவர்கள் மூன்று தலைமுறையாக ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ் சினிமாவில் 40 களில் இருந்து 70 களின் இறுதிவரை தொடர்ச்சியாக படங்கள் எடுத்து இந்தியா முழுவதும் அவற்றை ரிலீஸ் செய்து வெற்றிகொடி நாட்டிய நிறுவனம் ஏவிஎம். அந்த நிறுவனத்தின் நிறுவனர் ஏ வி மெய்யப்ப செட்டியார் இறந்த போது சில ஆண்டுகள் அவர்கள் படம் தயாரிக்காமல் இருந்தனர்.

இந்நிலையில் ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமா தயாரிப்பில் இறங்கி செகண்ட் இன்னிங்ஸிலும் வெற்றி கண்டது. அப்போது ஏவிஎம் நிறுவனம் முரட்டுக்காளை மற்றும் சகலகலா வல்லவன் ஆகிய படங்கள் ஹிட்டானதை அடுத்து தொடர்ந்து படங்கள் தயாரித்தனர். ஆனால் சினிமா தொழிலில் ஏற்பட்ட மாற்றத்தால் ஒரு கட்டத்தில் சினிமா தயாரிப்பதை நிறுத்திவிட்டு திரைக்குப் பின்னான வேலைகளில் கவனம் செலுத்தினர்.

ஏவிஎம் நிறுவனம் தயாரித்த பெருவெற்றி பெற்ற படங்களில் ஒன்று ஸ்ரீவள்ளி. அந்த படம் முருகனைப் பற்றிய படமாக உருவாக இருந்ததை அறிந்த டி ஆர் மகாலிங்கம் தானாக விரும்பிச் சென்று ஏவிஎம் செட்டியாரிடம் இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை எனக்குக் கொடுங்கள் எனக் கேட்டுள்ளார். அவர்கள் உறுதியாக எந்த பதிலும் சொல்லாத நிலையில் ‘எனக்கு சம்பளமாக ஒரு ரூபாய் கொடுத்தாலும் பரவாயில்லை’ என்று சொல்லியுள்ளார். அதே போல அப்போது வளர்ந்துவரும் நடிகையாக இருந்த குமாரி ருக்மணியையும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தனர். அவரின் மார்க்கெட் இந்த படத்துக்குப் பிறகு உயரும் என்பதை உணர்ந்த ஏவிஎம் நிறுவனம் தொடர்ந்து மூன்று படங்களுக்கான ஒப்பந்தமாக அதை போட்டுள்ளனர்.

படம் முடிந்து பார்த்த போது ருக்மணியின் குரல் பொருந்தாத மாதிரி இருந்ததால் அதை டப்பிங் செய்யலாம் என முடிவெடுத்துள்ளனர். ஆனால் ருக்மணி அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லையாம். ஏன் இப்படி பிடிவாதம் பிடிக்கிறார் என ஏவிஎம் நிறுவனத்தார் விசாரிக்கையில்தான் தனக்கு போட்டுள்ள மூன்று பட ஒப்பந்தத்தை கேன்சல் செய்தால் தன் குரலுக்கு வேறு யாரையாவது டப்பிங் பேச வைத்துக் கொள்ளுங்கள் எனக் கூறிவிட்டாராம். அதனால் வேறு வழியில்லாமல் அவரின் ஒப்பந்தததை கேன்சல் செய்துவிட்டு டப்பிங் பேசி படத்தை வெளியிட்டுள்ளனர். படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகியுள்ளது.

vinoth

Recent Posts

“நான் சாகல.. உயிரோடுதான் இருக்கேன்…” பிணமாக நடித்து முதியவர் நடத்திய நூதனப் போராட்டம்… உறைய வைக்கும் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…

5 minutes ago

“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…

15 minutes ago

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

24 minutes ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

31 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

35 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

40 minutes ago