#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் சுந்தர் சி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு விஷாலை வைத்து மதகஜராஜா என்ற திரைப்படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இப்படத்தின் படப்பிடிப்பு அதிவேகத்தில் முடிந்தது. அதே ஆண்டு பொங்கலுக்கு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் வெளிவரவில்லை. அதற்கு தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதார சிக்கல்தான் காரணம் என சொலல்ப்பட்டது. இந்த திரைப்படத்தில் விஷால், சந்தானம், வரலட்சுமி, சதீஷ், நிதின் சத்யா, சோனு சூட், அஞ்சலி மற்றும் மறைந்த நடிகர்கள் மணிவண்ணன், மயில்சாமி, மனோபாலா மற்றும் சிட்டிபாபு என பலரும் நடித்திருந்தனர். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் விஜய் ஆண்டனி இசை அமைத்திருந்தார்.
இந்த படத்தில் ஆர்யா கெஸ்ட் ரோலிலும், சதா ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். அதன் பின்னர் சில முறை இந்த படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு ஆனால் சில காரணங்களால் ரிலீஸாகவில்லை. விஷால் கூட இந்த படத்தைத் தானே வெளியிட முடிவு செய்தார். ஆனால் அதுவும் கைகூடவில்லை.
இந்நிலையில் இப்போது இந்த படத்தையே ரசிகர்கள் மறந்து போன நிலையில் தற்போது 12 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த படத்தின் வெளியீட்டு தேதி சாத்தியமாகியுள்ளது. இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதையடுத்து படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி நடந்தது. அதில் கலந்துகொண்ட விஷால் இளைத்துப் போய் கைநடுக்கத்தோடு காணப்பட்டார். இதனால் அவருக்கு என்ன ஆச்சு என பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் இதுபற்றி பேசும்போது “விஷாலின் தற்போதைய உடல் நிலைக்குக் காரணம் அவன் இவன் படம்தான். அதில் மாறுகண் கொண்டவராக அவர் நடித்த நிலையில் அது காரணமாக அவருக்கு தலைவலி பிரச்சனை வந்தது. அந்த வலியில் இருந்து விடுபட அவர் சில பழக்கங்களுக்கு அடிமையானார்” எனக் கூறியுள்ளார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவருவது குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரவலான பேச்சுகள் உலா வந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில், தங்களது…
இண்டியா கூட்டணி கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் பிரதிநிதிகள் முதன்முறையாகப் பங்கேற்ற நிகழ்வு, தமிழக அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ள…
மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள காந்தி நினைவு மருத்துவமனையில், ஆடை அறைக்கு வெளியே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொடூரமாகத்…
இரவு நேரத்தில் நெடுஞ்சாலைகளில் இயங்கும் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்படும் உணவகங்களில் போக்குவரத்துத் துறை அமைச்சர் பார்த்திபன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.…
அருப்புக்கோட்டையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆதரவோடு மணல் கொள்ளை நடப்பதாக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது குறித்து…
தமிழக வெற்றிக் கழகம் அரசுக்கு ஆதரவளித்து அமைச்சரவையில் இடம்பெற பாமக முனைப்பு காட்டுவதாகவும், அதற்காக பாமகவுக்கு இரு அமைச்சர் பதவிகளை…