இப்போதெல்லாம் லாரி, பேருந்து மற்றும் ஆட்டோ ஓட்டும்போது ஓட்டுநர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடையும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு சில ஓட்டுனர்கள் மட்டும்தான் வாகனத்தை ஓட்டிக் கொண்டிருக்கும்போது நெஞ்சுவலி வந்தால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விடுகிறார்கள். அப்படி பல ஓட்டுனர்கள் வண்டியை ஓரமாக நிறுத்தி வண்டியில் வாகனத்தில் இருக்கும் பயணிகளை காப்பாற்றியுள்ளனர். இது போன்ற பல சம்பவங்கள் செய்திகளாக வெளிவந்துள்ளது. அப்படி ஒரு சம்பவம் தான் சென்னையில் நடந்துள்ளது.
சென்னை அண்ணா நகரில் குழந்தைகளை பள்ளிக்கு ஏற்றிச் சென்ற முருகன் (40) என்ற ஆட்டோ டிரைவர் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் சமாளித்து ஆட்டோவை சாலையில் ஒரு பகுதியில் பத்திரமாக நிறுத்திவிட்டு மயங்கி விழுந்து உள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். தனது ஆட்டோவில் பயணித்த பள்ளி குழந்தைகளின் உயிரை காப்பாற்றி விட்டு அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…