புதுச்சேரியில் லூர்து என்ற நபர் ஆட்டோ டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கம் போல தன்னுடைய பணியில் இருந்த போது அவரை சுற்றி வளைத்த ரவுடிகள் சிலர் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து ஓட ஓட விரட்டி வெட்டி கொடூரமாக கொலை செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் தன்னுடைய நண்பனின் கொலைக்கு பழிக்கு பழி வாங்குவதற்காக பிரபல ரவுடியான கௌதம் என்பவரை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டியுள்ளார். இதனால் அவர் படுகொலை செய்யப்பட்டதாக காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ரவுடி கௌதம் மற்றும் அவரது ஆட்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட ஆட்டோ டிரைவரின் நண்பனான ருத்ரேஷ் என்பவரை ரவுடி கௌதம் மற்றும் அவருடைய ஆட்கள் வெட்டி படுகொலை செய்துள்ளனர். தன் நண்பனின் சாவுக்கு பழிவாங்குவதற்காக ரௌடி கௌதமை கொலை செய்ய லூர்து திட்டம் தீட்டி வந்த நிலையில் இது குறித்து அறிந்த கௌதம் அவரை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 106 இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அக்கட்சியின்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நிகழ்த்தியுள்ள சாதனை, பல தசாப்த கால…
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…