#image_title
ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆக உள்ள படங்கள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தங்கலான்:
பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் தங்கலான் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, டேனியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் கதையை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. வருகிற ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தங்கலான் படம் ரிலீஸ் ஆக உள்ளது.
டிமாண்டி காலணி 2:
இயக்குனர் அஜய் ஞானமுத்து டிமாண்டி காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். ப்ரியா பவானி சங்கர், அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படமும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
ரகு தாத்தா:
சுமன் குமார் இயக்கத்தில் உருவாகும் ரகு தாத்தா படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் எம்.எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த் சாமி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை தவறியுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
அந்தகன்:
பிரசாந்த் நடிப்பில் அந்தகன் திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் கண் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளியாக பிரசாந்த் நடித்துள்ளார். மேலும் கார்த்திக், சமுத்திரக்கனி, பிரியா ஆனந்த், சிம்ரன், ஊர்வசி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு எடுத்து முடிக்கப்பட்ட அந்தகன் படம் இப்போதுதான் ரிலீஸ் ஆக உள்ளது.
கொட்டுக்காளி:
காமெடியனாக தனது பயணத்தை ஆரம்பித்து நடிகராக மாறியவர் சூரி. சூரி நடிப்பில் கொட்டுக்காளி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை பிஎஸ் வினோத் ராஜ் இயக்கி உள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ் கே ப்ரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. கொட்டுக்காளி படம் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
வாழை:
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை திரைப்படம் உருவாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரிலீசான கர்ணன், மாமண்டன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. வாழைப்பழத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்த படமும் ஆகஸ்ட் மாதம் 23-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
#image_title
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவன் ஜில்லேலா ரவி (15), தசரா விடுமுறைக்காகத்…
லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…
தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…
பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…
ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…