ராஜஸ்தான் மாநிலம் நாகௌர் மாவட்டம் மூண்ட்வாவில் உள்ள யூகோ வங்கிக் கிளையில் நள்ளிரவு 2 மணியளவில் புகுந்த கொள்ளையர்களை, வங்கியின் பெண் மேலாளர் தனது கணவருடன் சேர்ந்து ஏடிஎம் பூத்திற்குள்ளேயே வைத்து ஷட்டரைப் பூட்டிச் சிறைபிடித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது.
மூண்ட்வா பகுதியில் உள்ள யூகோ வங்கியின் ஏடிஎம் சென்டரில் நள்ளிரவு 2:04 மணியளவில் இ-சர்வைலன்ஸ் அலாரம் மூலம் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் கண்டறியப்பட்டன. இதுகுறித்த அவசரத் தகவல் வங்கியின் மேலதிகாரியிடமிருந்து வங்கிக்கு மேலேயே வசித்து வந்த மேலாளர் சாரிகா சௌத்ரிக்கு உடனே அனுப்பப்பட்டது. தகவல் கிடைத்த அடுத்த சில நிமிடங்களிலேயே தனது கணவருடன் ஏடிஎம் சென்டருக்கு விரைந்து சென்றார் சாரிகா சௌத்ரி.
அங்கு இரண்டு மர்ம நபர்கள் ஏடிஎம்-இன் மேல் கவரை உடைத்து, சிசிடிவி கேமராக்கள் மீது கிரீஸ் தடவி, ஒயர்களைத் துண்டித்து கேஸ் கட்டர் மூலம் பணப் பெட்டியை உடைக்க முயன்று கொண்டிருப்பதைக் கண்டனர். வரவிருக்கும் வங்கி வேலைநிறுத்தத்தை முன்னிட்டு ஏடிஎம் இயந்திரத்தில் ரூ.16.09 லட்சம் பணம் நிரப்பி வைக்கப்பட்டிருந்தது. சிறிதும் பயப்படாமல் துணிச்சலாகச் செயல்பட்ட பெண் மேலாளர், உடனடியாக ஏடிஎம்-இன் வெளிப் பக்க ஷட்டரை வேகமாகக் கீழே இழுத்து வெளிப்புறமாகப் பூட்டினார்.
கொள்ளையர்கள் தப்பிக்க வழியின்றி உள்ளேயே மாட்டிக்கொண்ட நிலையில், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த 8 நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மூண்ட்வா போலிஸார், ஷட்டரைத் திறந்து உள்ளே சிக்கியிருந்த ரெண்டு கொள்ளையர்களையும், அவர்கள் வைத்திருந்த கேஸ் கட்டர் உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்து அதிரடியாகக் கைது செய்தனர். சமயோசிதமாகவும் துணிச்சலாகவும் செயல்பட்டு லட்சக்கணக்கான பணத்தைக் காப்பாற்றிய பெண் வங்கி மேலாளரின் இந்த வீரச் செயலை இணையவாசிகளும் அதிகாரிகளும் வியந்து பாராட்டி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் ஜகத்புரா பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷய பாத்ரா கோயில் சுற்றுவட்டாரத்தில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நேரத்தில் கடுமையான பரபரப்பு…
காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் உயிரிழந்த செய்தி ஒட்டுமொத்த தமிழகத்தையும் பெரும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.…
உத்தரப் பிரதேசத்தின் மகோபா பகுதியில் ஆண் வாரிசு பிறக்கவில்லை என்ற காரணத்திற்காகக் குடும்பத்தினர் கொடுத்த தொடர் மன உளைச்சல், ஒரு…
மதுரை தமிழக வெற்றி வேட்கை மற்றும் அரசியல் களத்தில், தவெக உட்கட்சி அமைப்பில் கோஷ்டி பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிரடி…
தமிழக நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் அமைச்சராக இருந்த K.N. நேருவுக்கு எதிரான ரூ.634 கோடி பணி நியமன ஊழல் புகாரில்,…
தீபாவளி பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியுடன் விமரிசையாகக் கொண்டாடும் வகையில், புதுச்சேரி மாநிலத்தைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை…