உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சஹஸ்த்ரதாரா சாலையில் உள்ள கானன் குஞ்சைச் சேர்ந்த சுஷ்மா வர்மா என்ற பெண், தனது மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, கருப்பு நிற காரில் வந்த இரு வாலிபர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாகக் காரில் கடத்த முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சுஷ்மா பயத்தில் அலறிய சத்தம் கேட்டு, அருகே தெருவைப் பெருக்கிக் கொண்டிருந்த மாநகராட்சித் துப்புரவுப் பெண் தொழிலாளியான மாயா தேவி மற்றும் அவரது இரு சக தோழிகளும் சிறிதும் பயமின்றி ஓடோடி வந்தனர். தங்கள் கையில் வைத்திருந்த தொடப்பக் கட்டையுடன் அந்த காரையும் கடத்தல் காரர்களை நோக்கி ஓடி வந்தனர்.
உடனே கடத்தல் கும்பல், பெண்ணை விட்டுவிட்டுச் சம்பவ இடத்திலிருந்து காரை வேகமாக இயக்கி ஓட்டம் பிடித்தது. பட்டப்பகலில் நடுரோட்டில் நடந்த இந்த நெஞ்சை உலுக்கும் கடத்தல் முயற்சியிலிருந்து பெண்ணைப் தைரியமாகக் காப்பாற்றிய துப்புரவுத் தொழிலாளர்களுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பிறந்தநாள் கொண்டாட்டத்திற்குப் பிறகு உறங்கச் சென்ற ஹேமாவதி என்ற ஏழு வயதுச் சிறுமி மறுநாள்…
தமிழக முதலமைச்சரின் இரண்டாவது தனிச் செயலாளராகப் பணியாற்றி வரும் ஜி. லட்சுமி பிரியா ஐஏஎஸ் அவர்களுக்கு, 'முதல்வரின் முகவரி' எனும்…
தமிழகத்தில் அதிக முறை ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெருமைக்குரிய அதிமுக, நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் உருவாக்கத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்…
திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்ட முறைகேடான உறவுகளும், அதனால் எழும் குற்ற உணர்வற்ற சுயநலமும் தனிமனித ஒழுக்கத்தைச் சிதைத்து மிகக் கொடூரமான…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா, கடந்த 11-ஆம் தேதி தனது…
கொச்சியில் அதிகாலை வேளையில் நிகழ்ந்த இந்த விபத்து, சாதாரண உழைப்பாளி ஒருவரின் வாழ்வை அநியாயமாகப் பறித்ததோடு மட்டுமல்லாமல், சட்டத்தை நிலைநாட்ட…