அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலக அளவில் 700 கோடி வசூலித்து சாதனை படைத்தது. பான் இந்தியா படமாக வெளியான ஜவானில் நயன்தாரா விஜய் சேதுபதி, தீபிகா படுகோன், பிரியாமணி சன்னியா மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உலக அளவில் ஜவான் திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு நடிகர் ஷாருகான் மீண்டும் அட்லீயுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அட்லீயிடம் கேட்டபோது புதிதாக இயக்கவிருக்கும் படத்தில் ஷாருக்கான் மட்டுமில்லாமல் நடிகர் கமல்ஹாசனும் இணைந்தால் அந்த படம் பிரம்மாண்ட அளவில் வெற்றி அடையும் என கூறியதாக தெரிகிறது.
இதனைக் கேட்டு ஷாருக்கானும் ஹேப்பி ஆனார். அவரும் உலக நாயகன் கமல்ஹாசன் அடுத்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார். இதனால் அட்லீ அடுத்ததாக இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தில் ஷாருக்கான், நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆனால் நடிகர் கமல்ஹாசன் தரப்பிலிருந்து இதுவரை எந்த தகவலும் வழியாகவில்லை. இதற்கிடையே இயக்குனர் அட்லீ நடிகர் விஜய் வைத்து படம் இயக்க உள்ளதாக ஒப்பந்தமாகி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…