தர்மபுரி பேருந்து நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு காதலி பேச மறுத்த ஆத்திரத்தில், இளம் பெண் ஒருவருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி தேங்காய்மரத்துப்பட்டியைச் சேர்ந்த ஷீலா (22) என்ற யுவதி, அங்குள்ள பிரபல நகைக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கும் தர்மபுரியைச் சேர்ந்த சின்னசாமி (31) என்பவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக காதல் இருந்துள்ளது. சின்னசாமி திருமண ஆசையோடு பெண் கேட்டுச் சென்றபோது, ஷீலாவின் பெற்றோர் அதற்கு கறாராக மறுப்பு தெரிவித்துவிட்டனர். பெற்றோர் பேச்சை மீற விரும்பாத ஷீலா, சின்னசாமியுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டதால் அவர் கடும் ஆத்திரமடைந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று மாலை வேலை முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக தர்மபுரி பேருந்து நிலையத்தில் ஷீலா காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சின்னசாமி, “ஏன் என்னிடம் பேசுவதில்லை? ஏன் என்னை கல்யாணம் செய்ய மறுக்கிறாய்?” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஷீலாவின் கழுத்து மற்றும் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார். ஷீலாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள், ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், தப்பியோட முயன்ற சின்னசாமியை வளைத்துப் பிடித்து தர்ம அடி கொடுத்து, தர்மபுரி டவுன் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கழுத்து மற்றும் வயிற்றில் பலத்த காயமடைந்த ஷீலாவுக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி, சுயநினைவு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், பொதுமக்களால் தாக்கப்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சின்னசாமியைக் கைது செய்துள்ள போலீசார், அவர் டிஸ்சார்ஜ் ஆனதும் தீவிர விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். காதலின் பெயரால் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…