IPS அருண், IG கண்ணன், இப்போது ACP யாஸ்மின்…. ஜெம் வீரமணி வழக்கில் வீழும் அதிகாரிகள்…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

Spread the love

தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ‘ஜெம் கிரானைட்ஸ்’ உரிமையாளர் வீரமணி மீதான போக்சோ மற்றும் பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றச்சாட்டுகளை மூடிமறைக்க முயன்ற உயர்மட்ட காவல் அதிகாரிகள் மீது அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்து வருகின்றன. இப்புகார் தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கூறி வழக்கை முடித்துவைப்பதாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த அப்போதைய விபசார தடுப்புப்பிரிவு உதவி ஆணையர் (தற்போது கோயம்பேடு ஏசிபி) யாஸ்மின் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். ஏற்கனவே சென்னை போலீஸ் பயிற்சி அகாடமி கூடுதல் டி.ஜி.பி அருண் ஐ.பி.எஸ் மற்றும் கோவை மண்டல ஐ.ஜி கண்ணன் ஐ.பி.எஸ் ஆகியோர் காத்திகோர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது உதவி ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வழக்கில் சிறுமிகளுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்றச்சாட்டுகளை ஆரம்பக்கட்ட விசாரணையிலேயே முறைப்படி கவனிக்காமலும், உரிய நடவடிக்கை எடுக்காமலும் அலட்சியமாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரின் மீதும் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இப்புகார் குறித்த விசாரணையை சரியாக மேற்பார்வையிடத் தவறியதன் காரணமாகவே கூடுதல் கமிஷனர் கண்ணன் மற்றும் போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் மீது தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. முதலமைச்சர் விஜய் உத்தரவின்பேரில், இக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை உறுதி செய்யப்படும் வகையில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

மற்றொருபுறம், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய ஜெம் வீரமணி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்ஹன் மற்றும் வீரமணியின் உதவியாளர் கணேசன் ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இதில் முக்கிய குற்றவாளிகளான சாந்தி மற்றும் மகேந்திர சிம்ஹன் ஆகிய இருவரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவர்களிடம் காவலில் வைத்து நடத்தப்படும் தீவிர விசாரணையின் மூலம் இந்த வழக்கில் மறைக்கப்பட்டுள்ள பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீரமணியின் இந்த பாலியல் அத்துமீறல்களால் இன்னும் எத்தனை சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், இக்கொடூரம் எவ்வளவு காலமாக நடைபெற்று வந்தது மற்றும் இதன் பின்னணியில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகவும், விசாரணையை திசைதிருப்புவதற்காகவும் வீரமணி யார் யாருக்கெல்லாம் லஞ்ச பணத்தை வாரி வழங்கினார் என்ற கோணத்திலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

Nanthini

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

26 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

29 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

32 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

35 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago