சட்டசபையில் பக்கா பிளானுடன் களமிறங்கும் திமுக…. இன்று விஜய்க்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி… பதற்றத்தில் ஆளுங்கட்சி…!

Spread the love

தமிழகச் சட்டமன்றத்தில் துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் அரை நூற்றாண்டு கால திராவிடக் கட்சிகளின் ஆட்சியை மாற்றி அமைத்து, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைக் கைப்பற்றி 4 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் 5-ஆம் தேதி தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தினசரி பல்வேறு துறைகளின் நிதி ஒதுக்கீடு தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்றன. கடந்த சில நாட்களாகவே ஆளுங்கட்சியான தவெக அமைச்சர்களுக்கும், எதிர்க்கட்சியான திமுக உறுப்பினர்களுக்கும் இடையே அவையில் காரசாரமான விவாதங்களும் குற்றச்சாட்டுகளும் பரிமாறப்பட்டு வருகின்றன.

அவையின் நேரலை நடவடிக்கைகள் தினமும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு 7.20 மணி வரை சுமார் 9 மணி நேரம் 50 நிமிடங்கள் இடைவிடாமல் சபை நிகழ்வுகள் நடைபெற்று சாதனை படைத்தன. இந்நிலையில், இன்றைய அமர்வில் மிக முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, போக்குவரத்து மற்றும் வீட்டுவசதித் துறை ஆகிய மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன. துறை சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் மீது இருதரப்பு உறுப்பினர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, முதலமைச்சர் விஜய் அவர்களின் நேரடித் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை மீதான மானியக் கோரிக்கை இன்று எடுத்துக்கொள்ளப்படுவதால், சட்டமன்றத்தில் அரசியல் சூடு பிடித்துள்ளது. மாநிலத்தில் ஆங்காங்கே அரங்கேறும் கொலை, கொள்ளை சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் காவல் மரணங்கள் உள்ளிட்ட சட்டம் – ஒழுங்கு பிரச்சனைகளை முன்வைத்து தவெக அரசை முடக்க எதிர்க்கட்சியான திமுக தீவிரமாக திட்டமிட்டுள்ளது. திமுக முன்னாள் அமைச்சர்களும் உறுப்பினர்களும் முதலமைச்சரை நோக்கி நேரடியாக சரமாரி கேள்விகளை எழுப்ப ஆயத்தமாகி வருகின்றனர்.

பல்வேறு மக்கள் சார்ந்த விவகாரங்களில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் சூழலில், இன்றைய விவாதத்தில் எழும் கடுமையான கேள்விகளை அவர் எவ்வாறு எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்குப் புள்ளிவிவரங்களுடன் முதலமைச்சர் விஜய் அளிக்கப்போகும் பதிலடி என்னவாக இருக்கும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இந்த விவாதம் இன்றைய சட்டமன்ற நிகழ்வுகளில் பெரும் சுவாரசியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

7 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

10 minutes ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

20 minutes ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

28 minutes ago

அடபாவேமே..! “நிறுத்தவே இல்லை”… கட்டுப்பாட்டை இழந்து பாய்ந்த கார்… சந்தையில் அலறியடித்து ஓடிய மக்கள்… பதறவைக்கும் பின்னணி…!!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு பரபரப்பான சந்தைப் பகுதியில், கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாகப் பாய்ந்து வந்த கார் ஒன்று…

28 minutes ago

மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞர்… 3 பேருக்கு மறுவாழ்வு தந்த உறுப்பு தானம்… மனைவியின் நெகிழ்ச்சி செயல்…!!

குஜராத் மாநிலத்தில் விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த 35 வயது இளைஞரின் உறுப்புகளைத் தானம் செய்ய அவரது மனைவி முன்வந்ததன்…

37 minutes ago