#image_title
பிரபல நடிகரான விஜய குமாரின் மகன் அருண் விஜய் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் தான் அருண் விஜய் பாலா இயக்கத்தில் உருவான வணங்கான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ், மிஸ்கின், சமுத்திரகனி, சாயாதேவி, பாலா சிவாஜி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.
இந்த படத்தில் நடிக்க முதலில் சூர்யா கமிட்டானார். ஆனால் ஒரு சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகி விட்டார். அதன் பிறகு தான் வணங்கான் திரைப்படத்தில் அருண் விஜய் நடித்தார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே முடிந்து விட்டது. விரைவில் படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்ததாக அருண் விஜய் ரெட்ட தல என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை க்ரிஷ் திருக்குமரன் இயக்குகிறார். ரெட்டை தல படத்தில் அருண் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் தான்யா ரவிச்சந்திரன், சித்தி இத்னானி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி அருகே காட்டுப்பகுதியில் ரெட்ட தல படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அங்கு ஓய்வின்போது அறும் விஜய் வேளாங்கண்ணி பேராலயத்திற்கு சென்று மண்டியிட்டு பிரார்த்தனை செய்துள்ளார். இன்று காரைக்கால் மாவட்டத்தில் உள்ள திருநள்ளாறில் சனிபகவானை தரிசனம் செய்வதற்காக அருண் விஜய் வந்துள்ளார்.
ஏற்கனவே அங்கு பக்தர்கள் ஏராளமானோர் இருந்தனர். அவர்கள் அருண் விஜயை பார்த்தவுடன் செல்ஃபி எடுக்க முண்டியடித்து கொண்டு வந்தனர் தனது ரசிகர்களுடன் அருண் விஜய் பொறுமையாக நின்று செல்பி எடுத்துக் கொண்டார். ஒவ்வொருவருக்கும் கை கொடுத்து அங்கிருந்து புறப்பட்டார். இதற்கிடையே கூட்டத்தில் சிக்கி அருண் விஜய் காலின் காயம் ஏற்பட்டது. உடனே போலீசார் பாதுகாப்பு கொடுத்து அருண் விஜயை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கேரள மாநிலம் குரவிலங்காடு பகுதியில், இருசக்கர வாகனத்தில் பயணித்த பாஸ்டர் ஜோமன் மேத்யூ மற்றும் அவரது மனைவி பாபிதா ஆகியோர்…
கர்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சிவமொக்கா தேர்வு மையத்தில், பட்டம் மற்றும் முதுகலைத் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகப்…
சமூக வலைதளங்களில் நாள்தோறும் எத்தனையோ விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகள் வைரலாகி வந்தாலும், தற்போது உலக நாடுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான…
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகாரில் முன்னாள் பாஜக மாவட்டத் தலைவர் தேவராஜ் சிங்கின் சொகுசு ஆடி கார் மோதி, மனோஜ்…
நியூயார்க்கின் ஆல்பனி நகரில் வசித்து வந்த தெலங்கானாவைச் சேர்ந்த 25 வயதுப் பெண் நல்லமலா அக்ஷிதா, மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக…
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் மத்தூர் பகுதியில், 15 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் 3…